கனடாவில் தொழில்புரிவோர் உலகில் அதிக அழுத்தத்தில் உள்ளனர்! ஆய்வுத் தகவல்

உலகளாவிய தொழிலாளர் மனநிலை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் கனடியர்கள் உலகின் மிக அதிக அழுத்தத்தை சந்திக்கும் பணியாளர்களாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

உலகளவில் 225,000 பேரிடம் பணியிடம் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கனடியர்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரித்துக் கொண்டிருந்தாலும் தினசரி மன அழுத்தத்தை சந்தித்து வருவதாக அந்த ஆய்வுத் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

உலக அளவில் 33 சதவீதமானோர் ‘சிறப்பாக வாழ்கிறோம்’ என கருதுகின்றனர். 58 வீதமானோர் ‘போராடிக்கொண்டிருக்கிறோம்’ என்று கூறியுள்ளனர். 9 வீதமானோர் நாம் துயரத்தில் உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தரவுகளில், கனடாவில் 53 வீதமானோர் தங்களை சிறப்பாக வாழ்கிறோம் எனக் கூறியுள்ள நிலையில், அமெரிக்காவில் 52 வீதமானோரும் ஐரோப்பாவில் 47 வீதமானோரும் தாங்கள் சிறப்பாக வாழ்வதாக குறிப்பிட்டுள்ளனர். எனினும், இதற்கான விலையாக அதிக மன அழுத்தத்தில் உள்ளதாக பதிவிட்டுள்ளனர்.

வாழ்வியல் செலவுகள், வீட்டு வாடகை, பணவீக்கம் போன்ற பொருளாதார அழுத்தங்களுடன், வேலை இடங்களில் ஆர்வம் குறைந்துள்ளதாக இந்த ஆய்வுத் தகவலில் தெரியவந்துள்ளது.

Video thumbnail
சீனா – கனடா வர்த்தக உறவில் புதிய திருப்பம்
01:34
Video thumbnail
வாங்கிய லொட்டரி வாழ்க்கையை மாற்றியது!
01:14
Video thumbnail
நேரம் மாறும் நேரம் வந்துவிட்டது!
01:22
Video thumbnail
குறைந்த வருமானமுடைய கனேடியருக்கு Automatic Tax Filing திட்டம்!
01:26
Video thumbnail
கனடா போஸ்ட் சுழற்சி முறையில் வேலை நிறுத்தம்! அடுத்த வாரம் தபால் சேவை ஆரம்பமாகும்!
01:04
Video thumbnail
டொராண்டோ கிழக்கு பகுதியில் வெள்ளை வேன் பட்டப் பகலில் திருட்டு! வலை வீசும் பொலிசார்
00:57
Video thumbnail
Top 25 Most Wanted பட்டியல்! டொராண்டோ கொலை சந்தேக நபர் முதலிடத்தில்
01:03
Video thumbnail
Top 25 Most Wanted பட்டியல்! டொராண்டோ கொலை சந்தேக நபர் முதலிடத்தில்
00:57
Video thumbnail
கனடா போஸ்ட் வேலைநிறுத்தம் காரணமாக டொராண்டோவில் வேகக் கேமரா அபராதங்கள் தற்காலிகமாக நிறுத்தம்!
01:15
Video thumbnail
கனடாவில் முதல்முறையாக துடிப்பு நின்ற இதயத்தை பயன்படுத்தி இதய மாற்று அறுவை சிகிச்சை!
01:30

Related Articles

Latest Articles