கனடாவில் சில வகை புற்றுநோய்களின் தாக்கம் அதிகரிப்பு!

இவ் வருடத்தில் ஆண்டில் கனடாவில் 250,000-க்கும் மேற்பட்ட புதிய புற்றுநோய் பாதிப்புகளும், சுமார் 90,000 புற்றுநோய் தொடர்பான மரணங்களும் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கனடிய மருத்துவ சங்க இதழில் (CMAJ) வெளியாகியுள்ள புதிய ஆய்விற்கு அமைவாகவே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

புற்றுநோய் இன்றும் கனடாவில் மரணத்திற்கான முதன்மைக் காரணியாகத் உள்ளது.

நுரையீரல், பெருங்குடல், சிறுநீர்ப்பை மற்றும் லுகேமியா போன்ற மூன்றில் இரண்டு பங்கு புற்றுநோய் வகைகளில் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைந்து வருவது மருத்துவ ஆராய்ச்சியில் கிடைத்துள்ள முன்னேற்றத்தைக் காட்டுகிறது.

நுரையீரல் புற்றுநோய் இன்றும் அதிக பாதிப்பை ஏற்படுத்தினாலும், புகைபிடித்தலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் பலன் அளித்து வருகின்றன.

கர்ப்பப்பை வாய் (Cervical), கணையம் (Pancreatic), தலை மற்றும் கழுத்துப் பகுதி புற்றுநோய்கள் அதிகரித்து வருகின்றன.

இவை குறிப்பாக HPV வைரஸுடன் தொடர்புடையவை என்பதால், தடுப்பூசி செலுத்துவதன் மூலம் இவற்றைத் தடுக்க முடியும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

புற்றுநோய் பாதிப்பு பொதுவாகக் குறையத் தொடங்கினாலும், 50 வயதிற்கு உட்பட்ட மற்றும் இளைஞர்கள் மத்தியில் மார்பகம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

வைத்தியர் ஜெனிபர் கில்லிஸ் (Dr. Jennifer Gillis) தலைமையிலான இந்த ஆய்வுக் குழு, ஆரம்பக்கால பரிசோதனைகளை (Screening) இளம் வயதினருக்கும் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

தடுப்பு நடவடிக்கைகள், ஆரம்பக் கண்டறிதல் மற்றும் சிகிச்சைகளில் தொடர்ந்து முதலீடு செய்வது அவசியமென இந்த மேற்படி அறிக்கை  சுட்டிக்காட்டுகிறது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles