கனடாவில் அதிரடி ஆட்குறைப்பு: 12,000 அரச தொழில்கள் பறிபோகிறது!

கனடாவின் மார்க் கார்னி (Mark Carney) அரசாங்கம் செலவினக் குறைப்பு நடவடிக்கைக மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 12,000 முழுநேர அரச உத்தியோகங்களை (Full-time equivalent positions) குறைக்கத் திட்டமிட்டுள்ளது.

2026-27 ஆம் ஆண்டிற்கான திணைக்கள அறிக்கைகளின் மூலம் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

முக்கியமாக, பொதுச் சேவைகள் மற்றும் கொள்முதல் திணைக்களத்தில் (Public Services and Procurement Canada) 1,793 இடங்களும், கனடா புள்ளிவிபரத் திணைக்களத்தில் (Statistics Canada) 900 இடங்களும், சுகாதாரத் திணைக்களத்தில் (Health Canada) 942 இடங்களும் குறைக்கப்படவுள்ளன.

மேலும், கனடிய விண்வெளி முகமை (Canadian Space Agency) தனது நிலவு வாகனத் திட்டத்தை (LEAP Lunar Rover Mission) நிறுத்த முடிவு செய்துள்ளது.

செலவுகளைக் குறைக்க செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப் போவதாகச் சில திணைக்களங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை பொதுச் சேவைகளைப் பலவீனப்படுத்தும் என்று அரச ஊழியர் சங்கத்தின் (PSAC) தலைவர் ஷரோன் டிசோசா (Sharon DeSousa) கண்டனம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினரும் இந்தத் திட்டத்தில் தெளிவான திட்டமிடல் இல்லை என விமர்சித்துள்ளனர்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles