கனடாவில் அடுத்தடுத்து பனிச்சரிவு – ஒரே நாளில் 4 பேர் உயிரிழப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்!

பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாகாணத்தின் வடமேற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு பனிச்சரிவுச் சம்பவங்களில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

டெரஸ் (Terrace, B.C.) நகருக்கு வடக்கே உள்ள மவுண்ட் நாஸ் (Mount Knauss) மலையில் ஹெலிகாப்டர் மூலம் பனிச்சறுக்கு விளையாட்டில் (Heli-skiing) ஈடுபட்டிருந்த மூவர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்ததை ஆர்.சி.எம்.பி (RCMP) பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றொருவர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், கனடா – அலாஸ்கா எல்லைக்கு அருகிலுள்ள பிளசண்ட் கேம்ப் (Pleasant Camp) பகுதியில் இடம்பெற்ற மற்றொரு பனிச்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

2025 டிசம்பர் மாதம் முதல் இதுவரை பிரிட்டிஷ் கொலம்பியாவில் பனிச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

வலுவான காற்று மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக மலைப்பகுதிகளில் பனிச்சரிவு அபாயம் “கணிசமாக” (Considerable) காணப்படுவதாக Avalanche Canada எச்சரித்துள்ளது.

மவுண்ட் நாஸ் பகுதியில் உயிரிழந்தவர்களின் விபரங்களை பி.சி. மரண விசாரணை அமைப்பு (B.C. Coroners Service) தற்போது ஆராய்ந்து வருகிறது.

பனிச்சறுக்கு மற்றும் பனி வாகனப் பயணங்களில் ஈடுபடுவோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Video thumbnail
கனடாவில் அதிகரித்து வரும் பலதுணை உறவுகள் – சட்ட ரீதியில் சிக்கல்!
01:17
Video thumbnail
றொரண்டோவிற்கு விசேட வானிலை எச்சரிக்கை - இடியுடன் கூடிய மழையைத் தொடர்ந்து கடும் குளிர்!
01:09
Video thumbnail
ஸ்மார்ட் கண்ணாடி மூலம் நூதன மோசடி – றொரண்டோவில் பாரிய சில்லறை வர்த்தக மோசடி கும்பல் கைது!
01:00
Video thumbnail
வான்கூவர் ஸ்கைட்ரெயினில் புதிய மார்க் V ரயில்கள் - பயணிகளுக்கு கூடுதல் வசதி!
01:07
Video thumbnail
சர்ச்சில் துறைமுக விரிவாக்கம் - பணிகளை முடிக்க மத்திய அரசு கடுமையான நிபந்தனை!
01:20
Video thumbnail
மிசிசாகாவில் பயங்கர தீ விபத்து - தனது தாய் மற்றும் சகோதரரைக் காப்பாற்ற தீக்குள் குதித்த நபர்!
00:55
Video thumbnail
ஸ்கார்பரோ ரயில் நிலையங்களில் வாகனத் திருட்டு - மூவர் கைது!
01:13
Video thumbnail
மளிகைப் பொருள் விலை உயர்வு - 'சர்வைலன்ஸ் பிரைசிங்' தடையை நிராகரித்தார் முதல்வர் டக் போர்ட்!
01:29
Video thumbnail
ஹாமில்டனில் போலி பொலிஸ் அதிகாரி அட்டகாசம்!
01:11
Video thumbnail
கனடா தபால் சேவை மாற்றம் - வீட்டுக்கு வீடு தபால் விநியோகம் விரைவில் நிறுத்தம்!
01:05

Related Articles

Latest Articles