கனடாவின் வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரிப் பரிசாக, Lotto Max பரிசுக் தொகை $85 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற குலுக்கலில் $80 மில்லியன் டொலர் பரிசை யாரும் வெல்லாததால், இந்த சாதனைத் தொகை செவ்வாய்க்கிழமைக்கான குலுக்கலுக்கு நகர்ந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெறும் குலுக்கலில் வெல்பவர்களுக்கு வரலாற்றுச் சாதனையாக $85 மில்லியன் டொலர் கிடைக்கும். யாரும் வெல்லாவிட்டால் இது $90 மில்லியனாக உயரும்.
இத்துடன் 16 Maxmillions பரிசுகள் தலா $1 மில்லியன் டொலரும், 85 Maxplus பரிசுகள் தலா $100,000 டொலரும் வழங்கப்படவுள்ளதாக Ontario Lottery and Gaming Corp. (OLG) அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர் கடந்த டிசம்பரில் லண்டன், ஒன்ராறியோவை (London, Ont.) சேர்ந்த இரு நண்பர்கள் பகிர்ந்து கொண்ட $80.4 மில்லியன் டொலரே சாதனையாக இருந்தது.
இந்தச் செய்தியை வாசிக்கின்ற வேளையில் உங்களுக்குப் பிடித்தமான லொட்டரியில் நீங்கள் எப்போதாவது பரிசுகளை வென்றுள்ளீர்களா?
