கனடாவில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் GST/HST கிரெடிட் நிதியுதவித் திட்டமானது, வரும் ஜூலை 2026 முதல் “கனடா மளிகை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பலன்” (Canada Groceries and Essentials Benefit – CGEB) என்ற புதிய பெயரில் மாற்றியமைக்கப்படவுள்ளது.
இப்புதிய திட்டத்தின் கீழ், தகுதிவாய்ந்த நபர்களுக்கான காலாண்டு நிதியுதவித் தொகை 2026 முதல் 2031 வரையான ஐந்து ஆண்டுகளுக்கு 25 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த இடைமாற்றக் காலத்திற்கு முன்னதாக, ஜூன் 5, 2026 முதல் தகுதியான கனடியர்களுக்கு ஒருமுறை மட்டும் வழங்கப்படும் GST/HST கிரெடிட் மேலதிக நிதியுதவியும் (Top-up payment) வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்திற்குப் பொதுமக்கள் தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை, கனடா வருவாய் முகமையகம் (Canada Revenue Agency – CRA) உங்களது 2025 வரிக் கணக்கீட்டு (Tax return) விபரங்களின் அடிப்படையில் தகுதியைத் தீர்மானிக்கும்.
புதிய திட்டத்தின் கீழ் அதிகபட்ச வருடாந்த நிதியுதவியாக தனி நபருக்கு $679 வரையும், தம்பதியருக்கு $890 வரையும், 19 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு தலா $234 வரையும் கிடைக்கப் பெறும்.










