கனடா அரசு தனது 2027-2029 ஆம் ஆண்டிற்கான புதிய குடிவரவுத் திட்டத்தை (Immigration Levels Plan) 2026 பட்ஜெட்டின் மூலம் வெளியிட்டுள்ளது.
2027 முதல் 2029 வரை ஆண்டிற்கு 380,000 நிரந்தரவாசிகளையும் (Permanent Residents), 370,000 தற்காலிகவாசிகளையும் (220,000 தொழிலாளர்கள் மற்றும் 150,000 மாணவர்கள்) அனுமதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதே போல் கனடாவில் ஏற்கனவே தற்காலிகமாக வசித்து வரும் சுமார் 200,000 பேருக்கு நிரந்தர குடியுரிமை (PR) வழங்குவதற்கான சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதில் 100,000 பேர் Express Entry அல்லது Provincial Nominee Program (PNP) மூலமாகவும், ஏனைய 100,000 பேர் தொண்டு/குடும்ப ஆதரவுத் திட்டங்கள் மூலமாகவும் தேர்வு செய்யப்படுவர்.
தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தைச் சீரமைக்க $151.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Rural Community Immigration Pilot திட்டம் நிரந்தரமாக்கப்பட்டு விரிவாக்கப்படுகிறது.
நாட்டின் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை 2027 ஆம் ஆண்டிற்குள் மொத்த மக்கள்தொகையில் 5 சதவீதமாகக் குறைப்பதே அரசின் முதன்மை இலக்காகும்.
எனினும், இந்தத் திட்டம் பெரிய நிறுவனங்களின் இலாபத்திற்காகவே உருவாக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சியின் குடிவரவு விவகார விமர்சகர் மிச்செல் ரெம்பல் கார்னர் (Michelle Rempel Garner) சாடியுள்ளார்.










