கனடாவின் கொள்கையினால் அமெரிக்கா உடனான உறவில் விரிசல் – அமெரிக்க வர்த்தக அறிக்கையில் தகவல்!

கனடாவின் மதுபானக் கட்டுப்பாட்டு விதிகள் மற்றும் மத்திய அரசின் கனடியப் பொருட்களுக்கே முன்னுரிமை’ (Buy Canadian) எனும் கொள்முதல் கொள்கை ஆகியவற்றை நேர்த்தியாக பின்பற்றி வருகிறது.

இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின் (USTR) புதிய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மாகாண மதுபான வாரியங்கள் விதித்துள்ள தடைகள், அமெரிக்க மதுபானங்களின் ஏற்றுமதியைப் பெருமளவில் பாதிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) விதித்த வரிகளுக்குப் பதிலடியாக, கனடாவின் பல மாகாணங்கள் அமெரிக்க மதுபானங்களை விற்பனையிலிருந்து நீக்கியிருந்தன.

இவற்றை மீண்டும் சந்தைக்குக் கொண்டுவர வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அதேபோல், 25 மில்லியன் டொலருக்கும் அதிகமான அரச ஒப்பந்தங்களில் கனடியத் தொழிலாளர்களுக்கும் பொருட்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் கொள்கையினையும் கனடா பின்பற்றுகிறது.

அது, அமெரிக்க நிறுவனங்களுக்குப் பாரபட்சமாக அமைந்துள்ளதாக வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் (Jamieson Greer) குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், CUSMA வர்த்தக ஒப்பந்தத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், கனடிய வர்த்தக அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் (Dominic LeBlanc) மெக்சிகோவுடன் இணைந்து முத்தரப்பு ஒப்பந்தத்தைத் தக்கவைக்க முயற்சி செய்து வருகிறார்

Related Articles

Latest Articles