‘கனடாவின் ஒவ்வொரு விஷயத்தையும் நான் நேசிக்கிறேன்’: இளவரசர் ஹரி சிறப்புப் பேட்டி!

cp24

கனடாவின் தொண்டு நிறுவனங்களுக்காக நிதி திரட்டும் நோக்கில், ஒன்ராறியோவின் Innisfil பகுதியில் விமானத்திலிருந்து Parachute மூலம் குதித்த Prince Harr), CTV News ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

102 வயதான இரண்டாம் உலகப் போர் வீரரான Ed Marshallக்கு அளித்த வாக்கைக் காப்பாற்றுவதற்காகவே இளவரசர் ஹரி இச்சாகசப் பயணத்தை மேற்கொண்டார்.

மருத்துவக் காரணங்களால் எட் மார்ஷலால் குதிக்க முடியாமல் போனதால், அவருக்குப் பதிலாக அவரது பேரன் Bailey Fullan ஹரியுடன் இணைந்து வான்குடையில் குதித்தார்.

இச்சாகசம் மூலமாக Sunnybrook Veterans Centre மற்றும் True Patriot Love Foundation அமைப்புகளுக்கு நிதி திரட்டப்பட்டுள்ளது.

பேட்டியின் போது, “கனடாவின் ஒவ்வொரு விஷயத்தையும் நான் நேசிக்கிறேன்; இன்றைய உலகில் நேர்மையான தலைமைத்துவத்திற்கு கனடா மிக முக்கிய பங்காற்றுகிறது” என இளவரசர் ஹரி புகழ்ந்துள்ளார்.

மேலும், பிரித்தானியாவிற்குத் திரும்பிய முடிவைப் பற்றிப் பேசுகையில், குழந்தைகள் அங்கு மகிழ்ச்சியாகப் படிப்பதாகவும், பிரிட்டன் மண்ணிற்குத் திரும்பியது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleஎரிந்த வாகனங்களில் கண்டெடுக்கப்பட்ட உடல்கள் : துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக Toronto பொலிஸார் உறுதி!
Next articleராட்சத டைனோசர்கள், பிரம்மாண்டமான சாசேஜ்கள்: கனடாவின் வீதியோர ஈர்ப்புச் சின்னங்கள் தற்காத்துக் கொள்ளப்படுமா?