ஒராண்டாக நடந்த ரகசிய விசாரணையில் டொராண்டோ (Toronto) நபர் கைது!

சுமார் ஒரு வருட காலமாக நடத்தப்பட்ட ரகசிய விசாரணையைத் தொடர்ந்து, குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டில் டொராண்டோவை (Toronto) சேர்ந்த 50 வயது நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

டொராண்டோவைச் சேர்ந்த 50 வயதான ஜோசப் மைக்கேல் மோர்டில்லாரோ (Joseph Michael Mortillaro) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மார்ச் 2025 இல் நயாகரா இணைய குழந்தைகள் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவினரால் (Niagara ICE Unit) ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணை, பின்னர் பீல் பிராந்திய பொலிசாருடன் (Peel Regional Police) இணைந்து முன்னெடுக்கப்பட்டது.​

இணைய வழியாக குழந்தைகளை பாலியல் ரீதியாக அணுக முயன்றது மற்றும் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இவர் இணையதளங்களில் “DadOfTwo” மற்றும் “Mike” ஆகிய பெயர்களைப் பயன்படுத்தியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள  இவரால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாராவது இருந்தால், உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு  பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Video thumbnail
கனடாவில் சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்கள் மற்றும் ஏ.ஐ (AI) தடை? லிபரல் கட்சி விவாதம்!
01:21
Video thumbnail
கனடாவில் எரிபொருள் விலை குறைப்பு - மத்திய அரசின் எரிபொருள் வரி 5 மாதங்களுக்கு நிறுத்தம்!
01:25
Video thumbnail
ஒன்ராறியோ சிறைச்சாலைகளில் குளறுபடி - ஒவ்வொரு ஆண்டும் பெருமளவான கணக்கான கைதிகள் தவறுதலாக விடுதலை!
01:10
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:15
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:07
Video thumbnail
38,000 கிலோ பிளாஸ்டிக் மறுசுழற்சி – சாதனை செய்தது வான்கூவர்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் கனமழை - வீதிகளில் நீர் தேக்கம், சாரதிகளுக்கு எச்சரிக்கை!
01:12
Video thumbnail
ரெஜினாவில் (Regina) நள்ளிரவில் தீ வைப்பு - பாதுகாப்பு கெமராவில் பதிவான அதிர்ச்சி காட்சி!
01:05
Video thumbnail
பிராம்ப்டனில் கோர விபத்து - எஸ்.யு.வி கார் லொரியின் அடியில் சிக்கி நபர் பலி!
01:02
Video thumbnail
ஒன்ராறியோவில் பல பில்லியன் டொலர் செலவில் சிறை கொள்ளளவை அதிகரிக்க திட்டம்!
01:25

Related Articles

Latest Articles