ஒன்ராறியோ தம்பதிக்கு நேர்ந்த பாரிய வங்கி மோசடி – 90,000 டொலர்களை இழந்து தவிப்பு!

ஒன்ராறியோவின் சட்பரி (Sudbury) பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், தமது வங்கிச் சேமிப்பில் இருந்த 90,000 டொலர்களுக்கும் அதிகமான பணத்தை வங்கி மோசடி மூலம் இழந்துள்ளனர்.

டிலின் கில்பர்ட்-லெடக் (Dilyn Gilbert-Leduc) மற்றும் அவரது மனைவி நடத்தி வரும் வணிக மற்றும் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து கடந்த மார்ச் 31 அன்று அனைத்துப் பணமும் திருடப்பட்டுள்ளது.

ஸ்கோஷியா வங்கியின் (Scotiabank) வாடிக்கையாளர் சேவை இலக்கத்திலிருந்து (Caller ID) அழைப்பு வருவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி (Spoofing), மோசடியாளர்கள் இவர்களைத் தொடர்பு கொண்டுள்ளனர்.

வங்கியிலிருந்து தான் பேசுகிறார்கள் என நம்பி, விபரங்களைப் பகிர்ந்ததால் இப்பணம் பறிபோயுள்ளது.

இது குறித்து ஸ்கோஷியா வங்கி கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது.

எனினும், வங்கி அதிகாரிகள் ஒருபோதும் இரகசிய குறியீடுகளைத் (PIN/Password) தொலைபேசி ஊடாகக் கேட்கமாட்டார்கள் என்றும், அழைப்பு வரும் இலக்கங்களை அப்படியே நம்ப வேண்டாம் என்றும் வங்கி பொதுமக்களை எச்சரித்துள்ளது.

வங்கியிடமிருந்து எவ்வித ஆதரவும் கிடைக்காத நிலையில், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் தற்போது இவர்கள் தமது வாழ்வாதாரத்தையும் வணிகத்தையும் முன்னெடுத்து வருகின்றனர்.

தொலைபேசி திரையில் வங்கியின் உத்தியோகபூர்வ இலக்கம் தெரிந்தாலும், அதனை உறுதிப்படுத்தாமல் விபரங்களை வழங்க வேண்டாம் என கனடிய மோசடி தடுப்பு மையம் (Canadian Anti-Fraud Centre) அறிவுறுத்தியுள்ளது.

வங்கி தனது பாதுகாப்புக் குறைபாடுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், இழந்த பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் இந்தத் தம்பதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Video thumbnail
🎥✨ The World in Tamil — Amazing Facts, Tips & Global News, Every Week!
01:11
Video thumbnail
வீட்டை நேரில் பார்த்தும் Rental Scam-ல் சிக்க முடியுமா? — ஆம்!
01:11
Video thumbnail
2020-ல் உங்கள் CRA account hack செய்யப்பட்டதா? உங்களுக்கு $5,000 வரை கிடைக்க வாய்ப்பு இருக்கலாம்!
01:07
Video thumbnail
ஒரு Seatbelt காரணமாக முழு விமானமும் ரத்தாகுமா? — Victoria-வில் அதுதான் நடந்துள்ளது!
01:00
Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33
Video thumbnail
Facebook, Instagram சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா?
01:33
Video thumbnail
Weekend Plan இருக்கிறதா? வெளியே புறப்படுவதற்கு முன் Scarborough வானிலையை பாருங்கள்!
01:01
Video thumbnail
Toronto Zoo-வுக்கு வந்துள்ள புதிய குட்டி விருந்தினர்!
00:43
Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36

Related Articles

Latest Articles