ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள சிறைச்சாலைகளில் நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் தரவுப் பதிவுகளில் ஏற்படும் தவறுகளால், ஒவ்வொரு ஆண்டும் பெருமளவான கைதிகள் முறையாகத் திட்டமிடப்படாமல் தவறுதலாக விடுதலை செய்யப்படுவதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
2021 முதல் 2024-ஆம் ஆண்டு வரை சுமார் 118 கைதிகள் இவ்வாறு ‘முறையற்ற’ (Improperly) முறையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2025-ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் 39 பேர் தவறுதலாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தவறுகள் பெரும்பாலும் சிறைச்சாலை நிர்வாக மட்டத்திலான கவனக்குறைவு மற்றும் தொழில்நுட்பத் தவறுகளால் ஏற்படுவதாக அரசு ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
சிறைச்சாலை நெரிசல் மற்றும் பணியாளர் பற்றாக்குறை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தத் தவறுகள் ‘ஏற்றுக்கொள்ள முடியாதவை’ என்று அரசு தரப்பில் கூறப்பட்டாலும், முதல்வர் டக் போர்ட் (Doug Ford) சிறைச்சாலை விரிவாக்கத் திட்டத்திலேயே கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது ஒன்ராறியோ சிறைச்சாலைகள் 130 சதவீதத்திற்கும் அதிகமான கொள்ளளவுடன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.










