ஒண்டாரியோவில் சோகம் – விபத்தில் 5 சிறுவர்கள் பலி 6 பேருக்கு தீவிர சிகிச்சை!

கனடா, ஒண்டாரியோவின் மேப்பல்டன் நகரில் (Mapleton Township) கடந்த வெள்ளிக்கிழமை வேன் மற்றும் எஸ்.யூ.வி (SUV) ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 5 சிறுவர்கள் உயிரிழந்த சோகம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த சிறுவர்கள் 4, 6, 8, 10 மற்றும் 12 வயதுடைய நான்கு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் ஆவர்.

வேனில் பயணித்த ஒரு கைக்குழந்தை, சிறுவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா-பாட்டி என நம்பப்படும் இரு முதியவர்கள் உட்பட 6 பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SUV வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரும் ஆபத்தான நிலையில் உள்ளார்.

இந்த சோகமான சூழலுக்கு மத்தியில், ஒண்டாரியோ மாகாண பொலிஸார் (OPP) சந்திப்புகளில் (intersections) ஏற்படும் விபத்துகளைத் தடுக்க “Stop, Look, Live” என்ற பெயரில் புதிய பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு வாரத்தை அடுத்த வாரம் முதல் தொடங்கவுள்ளனர்.

கடந்த 2021 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் சுமார் 5,000 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளன.

அதில் கால் பகுதி விபத்துகள் இதுபோன்ற சந்திப்புகளிலேயே நடந்துள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து மேப்பல்டன் மேயர் க்ரெக் டேவிட்சன் (Gregg Davidson), ஒண்டாரியோ பிரீமியர் டக் போர்ட் (Doug Ford) மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் த்வைட் திப் (Dwight Thib) ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலையும், மீட்புப் பணியில் உதவிய “நல்ல சமாரியர்களுக்கு” (Good Samaritans) நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03

Related Articles

Latest Articles