ஒன்ராறியோ வாகனக் காப்பீட்டுத் திட்டத்தில் ஜூலை 1 முதல் அதிரடி மாற்றம் – வாகன சாரதிகள் கவனத்திற்கு!

கனடாவின் ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில் எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல் வாகனக் காப்பீட்டு (Auto Insurance) பலன்களில் பெரிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. இதனால் காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிக்கும் வாகன சாரதிகள் புதிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தற்போது ஒன்ராறியோ ஓட்டுநர்களின் காப்பீட்டுத் திட்டங்களில் 12 கட்டாயப் பலன்கள் (Mandatory Benefits) சேர்க்கப்பட்டுள்ளன.

ஆனால், இந்த புதிய மாற்றத்தின்படி அவற்றில் 9 பலன்கள் “விருப்பத்திற்குரியதாக” (Optional) மாற்றப்படவுள்ளன.

மருத்துவப் பலன்கள் (Medical), மறுவாழ்வுப் பலன்கள் (Rehabilitation) மற்றும் உதவியாளர் பராமரிப்புப் பலன்கள் (Attendant Care) ஆகியவை மட்டுமே தொடர்ந்து கட்டாயமாக இருக்கும்.

வருமான மாற்றுப் பலன்கள் (Income Replacement), வேலை செய்யாதவர்களுக்கான பலன்கள், பராமரிப்பாளர் பலன்கள், வீட்டுப் பராமரிப்புச் செலவுகள், பார்வையாளர் செலவுகள், கல்வி இழப்புச் செலவுகள், தனிப்பட்ட பொருட்கள் சேதமடைதல் மற்றும் மரண/ஈமச்சடங்கு செலவுகள் ஆகியவை விருப்பத்தேர்வாக மாறுகின்றன.

இந்த விருப்பத்தேர்வு பலன்களைத் தவிர்ப்பதன் மூலம் காப்பீட்டுக் கட்டணத்தில் (Premium) மாதத்திற்கு சுமார் 10 டாலர்கள் அல்லது 5 சதவீதச் சேமிப்பு கிடைக்கலாம் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.

எனினும், இதனால் விபத்து ஏற்படும் பட்சத்தில் சாரதிகள் பெரும் நிதி அபாயங்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, விபத்தில் சிக்கிய பாதசாரிகள் அல்லது மிதிவண்டி ஓட்டுநர்களுக்கு இந்த விருப்பத்தேர்வு பலன்கள் இனி தானாகப் பொருந்தாது. 

 

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles