உலோகத் துகள்கள் கலப்பு : அச்சத்தால் கனடாவில் பிரபல பியர் வகைகள் மீளழைப்பு!

cbc

உலோகத் துகள்கள் (Pieces of metal) கலந்திருக்கலாம் என்ற காரணத்தினால், மோல்சன் கூர்ஸ் (Molson Coors) நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்படும் பல்வேறு மதுபான மற்றும் மதுபானமற்ற பியர் (Beer) வகைகள் கனடா (Canada) முழுவதும் மீளப்பெறப்படுவதாக கனடா சுகாதாரத் திணைக்களம் (Health Canada) அறிவித்துள்ளது.

செயின்ட் ஜோன்ஸ் (St. John’s) தொழிற்சாலையில் பொதி செய்யப்பட்டவை உட்பட அட்லாண்டிக் கனடாவில் (Atlantic Canada) விநியோகிக்கப்பட்ட மோல்சன் கனடியன் (Molson Canadian), கூர்ஸ் லைட் (Coors Light), புளூ மூன் (Blue Moon), பிளாக் ஹார்ஸ் (Black Horse) மற்றும் இந்தியா (India) ஆகிய பியர் வகைகளின் குறிப்பிட்ட சில தொகுதி குறியீடுகளைக் (Case codes) கொண்ட பானங்கள் இந்த அறிவிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்தக் குறியீடுகள் கொண்ட தயாரிப்புகளை உடனடியாக விற்பனை செய்வதை நிறுத்துமாறு சில்லறை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கொள்வனவு செய்த வாடிக்கையாளர்கள் அவற்றை மீண்டும் கடைகளில் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதுவரை எவருக்கும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டதாகத் தகவல்கள் பதிவாகவில்லை என அந்நிறுவனத்தின் பேச்சாளர் ரியான் மெக்கென்னா (Ryan McKenna) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நியூபவுண்ட்லாந்து மற்றும் லாப்ரடோர் மதுபானக் கூட்டுத்தாபனம் (Newfoundland and Labrador Liquor Corporation) பாதிக்கப்பட்ட பானங்களை விற்பனை நிலையங்களிலிருந்து அகற்றியுள்ளதுடன், திறக்கப்படாத பானங்களைத் திருப்பித் தரும் வாடிக்கையாளர்களுக்குப் பணத்தை மீள வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

Previous articleRemembrance Day நிகழ்வில் காவல்துறை அதிகாரி போல் வேடமிட்ட பெண்ணுக்கு சிக்கல்!
Next articleநிலையான நேரத்தை விரும்பு Alberta மக்கள் – இருண்ட காலைப் பொழுதுகளால் அவதி!