நிலையான நேரத்தை விரும்பு Alberta மக்கள் – இருண்ட காலைப் பொழுதுகளால் அவதி!

citynews

கனடாவின் அல்பேர்ட்டா (Alberta) மாகாணத்தில் இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிரந்தரப் பகலொளி சேமிப்பு நேரத்தை (Permanent Daylight Saving Time) விட, காலை வேளையில் அதிக சூரிய ஒளியைப் பெறும் நிரந்தர நிலையான நேரத்தையே (Permanent Standard Time) பெரும்பாலான மக்கள் விரும்புவதாகப் புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

அங்கஸ் ரீட் நிறுவனத்தின் (Angus Reid Institute) கருத்துக்கணிப்பின்படி, அல்பேர்ட்டாவின் 41 சதவீதமானோர் நிலையான நேரத்தையும், 31 சதவீதமானோர் தற்போதைய பகலொளி நேரத்தையும் விரும்புகின்றனர்.

அத்துடன், 21 சதவீதமானோர் பழையபடி வருடத்திற்கு இருமுறை நேரத்தை மாற்றும் முறையே சிறந்தது எனக் கூறியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வழமை போல் கடிகார நேரம் மாற்றப்படாததால், இலத்திரனியல் சாதனங்களில் நேரம் தானாக மாறாமை உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாக 65 சதவீதமான அல்பேர்ட்டா (Alberta) மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மற்றும் மனிடோபா (Manitoba) ஆகிய மாகாணங்களிலும் சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் இருண்ட காலைப் பொழுதுகளால் சிரமப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

நேர மாற்றத்தை ரத்து செய்த பின்னர், இதனை ஒரு வருடம் பயன்படுத்திப் பார்க்குமாறும், மக்களுக்கு இதில் உடன்பாடு இல்லாவிட்டால் பழைய முறைக்குத் திரும்புவது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் அல்பேர்ட்டா முதல்வர் டேனியல் ஸ்மித் (Danielle Smith) முன்னதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஉலோகத் துகள்கள் கலப்பு : அச்சத்தால் கனடாவில் பிரபல பியர் வகைகள் மீளழைப்பு!