உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு (LNG) விநியோகஸ்தர்களில் ஒன்றாக கனடா உருவெடுக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் Tim Hodgson தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு சுமார் 100 மில்லியன் டன்கள் வரை எரிவாயுவை ஏற்றுமதி செய்வதே இலக்கு என அவர் நாடாளுமன்றக் குழுவிடம் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் Mark Carney இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தில் LNG ஏற்றுமதி முக்கிய இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது Kitimat, B.C. இல் உள்ள LNG Canada முனையம் செயல்பாட்டில் உள்ள நிலையில், Ksi Lisims, Woodfibre மற்றும் Cedar LNG போன்ற புதிய திட்டங்கள் மூலம் உற்பத்தித் திறனை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜப்பான், தென் கொரியா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் கனடாவின் எரிவாயுவைப் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
இருப்பினும், இந்தத் திட்டங்கள் சூழலியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் எனச் சூழலியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக LNG Canada Phase 1 திட்டம் ஆண்டுக்கு 2.1 மில்லியன் டன் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், நிலக்கரிக்கு மாற்றான ஒரு ‘மாறுதல் எரிபொருளாக’ (Transition fuel) இதனை அரசாங்கம் முன்னிறுத்தி வருகிறது.
