ஈஸ்ட் யோர்க் பகுதியில் இரு பெண்களுக்கு இடையே மோதல் – ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்கு!

றொரண்டோவின் ஈஸ்ட் யோர்க் (East York) பகுதியில் புதன்கிழமை இரவு இரண்டு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கத்திக்குத்தில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லம்ஸ்டன் அவென்யூ (Lumsden Avenue) மற்றும் ஈஸ்ட்டேல் அவென்யூ (Eastdale Avenue) சந்திப்புப் பகுதியில் இரவு 10:40 மணியளவில் இரண்டு பெண்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இந்த மோதலில் 40 வயதுகளில் மதிக்கத்தக்க பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்தார்.

உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலேயே மோதலில் ஈடுபட்ட மற்றைய 47 வயதுடைய பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக விபரங்கள் எதனையும் பொலிஸார் தற்போது வெளியிடவில்லை.

ஈஸ்ட் யோர்க் பகுதியில் இரவு நேரத்தில் இடம்பெற்ற இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சிறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video thumbnail
🎥✨ The World in Tamil — Amazing Facts, Tips & Global News, Every Week!
01:11
Video thumbnail
வீட்டை நேரில் பார்த்தும் Rental Scam-ல் சிக்க முடியுமா? — ஆம்!
01:11
Video thumbnail
2020-ல் உங்கள் CRA account hack செய்யப்பட்டதா? உங்களுக்கு $5,000 வரை கிடைக்க வாய்ப்பு இருக்கலாம்!
01:07
Video thumbnail
ஒரு Seatbelt காரணமாக முழு விமானமும் ரத்தாகுமா? — Victoria-வில் அதுதான் நடந்துள்ளது!
01:00
Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33
Video thumbnail
Facebook, Instagram சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா?
01:33
Video thumbnail
Weekend Plan இருக்கிறதா? வெளியே புறப்படுவதற்கு முன் Scarborough வானிலையை பாருங்கள்!
01:01
Video thumbnail
Toronto Zoo-வுக்கு வந்துள்ள புதிய குட்டி விருந்தினர்!
00:43
Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36

Related Articles

Latest Articles