ஒன்ராறியோவில் ஊடுருவும் பூச்சியினம்!

ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில் தாவரங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் ‘ஸ்பொட்டட் லான்டர்ன்பிளை’ (Spotted Lanternfly) எனப்படும் ஊடுருவும் பூச்சியினம் கண்டறியப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட செட்டிப்பானைகளுக்குள் ஒரு டஜன் பூச்சிகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கனடிய உணவு ஆய்வு முகமை (CFIA) உறுதிப்படுத்தியுள்ளது.

இது, கடந்த மார்ச் மாதம் சென். கெத்தரினஸ் (St. Catharines) பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்த பூச்சிகள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

சீனாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தப் பூச்சிகள், மரங்களின் பட்டைகளைக் கடித்து சாற்றை உறிஞ்சிக் குடிக்கும்.

இதனால் சுரக்கும் திரவம் கரும் பூஞ்சை வளரக் காரணமாகி, திராட்சை தோட்டங்கள், பழத் தோட்டங்கள் மற்றும் மரங்களைப் பாரியளவில் அழிக்கும் வல்லமை கொண்டது.

அமெரிக்காவின் நியூயோர்க் (New York) மற்றும் பென்சில்வேனியா (Pennsylvania) போன்ற மாநிலங்களில் இந்தப் பூச்சிகளால் மில்லியன் கணக்கான டொலர்கள் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாகத் திராட்சை மற்றும் பியர் (Beer) தயாரிக்கப் பயன்படும் ஹொப்ஸ் (Hops) பயிர்களுக்கு இது பெரும் எதிரியாகும்.

இந்தப் பூச்சிகளைக் கண்டால் உடனடியாக “நசுக்கி அழிக்குமாறு” (Squish or Stomp) நிபுணர்கள் கோருகின்றனர்.

நியூயோர்க் போன்ற இடங்களில் இந்தப் பரப்புரை வெற்றியளித்துள்ளது.

சிவப்பு நிற இறக்கைகளில் கறுப்புப் புள்ளிகளைக் கொண்ட இந்தப் பூச்சிகள், ஒரே நேரத்தில் 30 முதல் 50 முட்டைகள் வரை இடக்கூடியவை.

இந்தப் பூச்சிகள் கனடாவில் இன்னும் நிலைபெறவில்லை என்றாலும், பொதுமக்கள் இவற்றைக் கண்டால் புகைப்படம் எடுத்து CFIA அமைப்பிற்குத் தெரியப்படுத்துமாறும், அவற்றின் முட்டைகளைக் கண்டால் சுரண்டி எடுத்து அழிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Video thumbnail
வீட்டை நேரில் பார்த்தும் Rental Scam-ல் சிக்க முடியுமா? — ஆம்!
01:11
Video thumbnail
2020-ல் உங்கள் CRA account hack செய்யப்பட்டதா? உங்களுக்கு $5,000 வரை கிடைக்க வாய்ப்பு இருக்கலாம்!
01:07
Video thumbnail
ஒரு Seatbelt காரணமாக முழு விமானமும் ரத்தாகுமா? — Victoria-வில் அதுதான் நடந்துள்ளது!
01:00
Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33
Video thumbnail
Facebook, Instagram சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா?
01:33
Video thumbnail
Weekend Plan இருக்கிறதா? வெளியே புறப்படுவதற்கு முன் Scarborough வானிலையை பாருங்கள்!
01:01
Video thumbnail
Toronto Zoo-வுக்கு வந்துள்ள புதிய குட்டி விருந்தினர்!
00:43
Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45

Related Articles

Latest Articles