இர்மா கலாஸ்டிகா காணாமல் போன வழக்கு – $25,000 சன்மானம் அறிவிப்பு!

றொரண்டோவைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு குழந்தைக்கு தாயான இர்மா கலாஸ்டிகா (Irma Galastica), 2024 ஆகஸ்ட் 31 முதல் காணாமல்  போயிருந்தார்.

அவரைப் பற்றிய தகவல் தருவோருக்கு $25,000 சன்மானம் வழங்கப்படும் என ஹால்டன் பிராந்திய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஓகஸ்ட் 30, 2024 அன்று றொரண்டோவில் உள்ள தனது குடியிருப்பிலிருந்து வெளியேறிய இர்மா, அன்று இரவு ஹாமில்டனில் (Hamilton) உள்ள ‘சன்கோபா’ (Sankofa) என்ற பாரிற்குச் சென்றுள்ளார்.

பின்னர், அங்கிருந்து சில ஆண்களுடன் ஒரு வாகனத்தில் ஏறிச் சென்றுள்ளார்.

அவர் கடைசியாக பர்லிங்டனில் (Burlington) உள்ள ஒரு வீட்டில் இருந்தபோது, தனது நண்பர் ஒருவருக்கு, “நான் ஹாமில்டனில் இருக்கிறேன், ஒருவேளை நான் வீடு திரும்பாவிட்டால் இதை நினைவில் கொள்,” என ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

அதுவே அவரிடமிருந்து வந்த கடைசித் தகவலாகும்.

வெள்ளையின நபருடன் காணப்பட்டதாகவும், அந்த நபர் இர்மா காணாமல் போன சில நாட்களில் மெக்சிகோவிற்குத் தப்பியோடிவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணை தற்போது “கொலை” (Homicide) என்ற கோணத்திலும் ஆராயப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

இர்மாவின் இருப்பிடம் குறித்த துல்லியமான தகவல்களைத் தருவோருக்கு இந்த $25,000 சன்மானம் வழங்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33
Video thumbnail
Facebook, Instagram சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா?
01:33
Video thumbnail
Weekend Plan இருக்கிறதா? வெளியே புறப்படுவதற்கு முன் Scarborough வானிலையை பாருங்கள்!
01:01
Video thumbnail
Toronto Zoo-வுக்கு வந்துள்ள புதிய குட்டி விருந்தினர்!
00:43
Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10

Related Articles

Latest Articles