இந்தியாவின் போலி Expiry Labels கனடா வந்ததா? CFIA விசாரணை!

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட போலி food labelling மோசடி தொடர்பாக, கனடாவின் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர்.

மும்பைக்கு அருகிலுள்ள Navi Mumbai பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், காலாவதியான அல்லது காலாவதியாகும் நிலையில் இருந்த பொதிசெய்யப்பட்ட உணவுப் பண்டங்களின் காலாவதி திகதி மற்றும் ஊட்டச்சத்துத் தகவல் மாற்றப்பட்டதாக இந்திய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அங்கு உணவுப் பொருட்களுடன், பழைய தகவல்களை அழிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் chemicals, புதிய labels அச்சிடும் machines மற்றும் packaging உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.

Lay’s, Maggi, Kurkure உள்ளிட்ட பல பிரபல தயாரிப்புக்கள் அங்கு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த brand நிறுவனங்கள் இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக எந்த குற்றச்சாட்டும் இல்லை.

இந்த விவகாரத்தில் கனடாவை கவனிக்க வைத்த முக்கிய விடயம், அங்கு கண்டுபிடிக்கப்பட்ட Kurkure packet ஒன்றில் English மற்றும் French மொழிகளில் nutrition label இருந்தது.

இது கனடாவில் பயன்படுத்தப்படும் இருமொழி லேபிளிங் முறையை ஒத்திருந்தாலும், அந்த பொருள் கனடாவுக்கு அனுப்பப்பட இருந்தது என்பதற்கான ஆதாரம் இதுவரை இல்லை.

கனடிய உணவு ஆய்வு முகமை, இந்த சம்பவம் கனடாவுக்கான இறக்குமதிகளுக்கு ஏதேனும் அபாயத்தை ஏற்படுத்துகிறதா என்பதை தற்போது கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.

மிக முக்கியமாக, போலி தகவல்களை கொண்ட உணவுப் பண்டங்கள் கனடாவுக்குள் வந்ததாக இதுவரை எந்த தகவலும் இல்லை என்றும் அது தெளிவுபடுத்தியுள்ளது.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Articles

Latest Articles