ஆல்பர்ட்டாவில் காட்டுத்தீ அபாயம் – நகரங்களைப் பாதுகாக்கத் தீவிரமடையும் தடுப்பு நடவடிக்கைகள்!

ஆல்பர்ட்டா (Alberta) மாகாணத்தில் பனிப்பொழிவு இன்னும் முழுமையாக நீங்காத நிலையிலும், காட்டுத்தீ பருவம் தொடங்கியுள்ளது.

குறிப்பாக, கேன்மோர் (Canmore) மற்றும் ஹின்டன் (Hinton) போன்ற மலைப்பிரதேச நகரங்கள், கடந்த ஆண்டு ஜாஸ்பர் (Jasper) நகருக்கு ஏற்பட்ட அழிவை மனதில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

கேன்மோர் மேயர் Sean Krausert, நகரைச் சுற்றி காடுகளை அகற்றி “தீயணைப்பு அரண்களை” (fireguards) அமைக்கும் பணிகள் பல கட்டங்களாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சுமார் 150 மீற்றர் அகலமும் 15 கிலோமீற்றர் நீளமும் கொண்ட பிரம்மாண்டமான தீயணைப்புத் தடுப்பு வளையம் இதில் குறிப்பிடத்தக்கது.

அதேபோல, ஹின்டன் மேயர் Brian Laberge, தமது நகரைச் சுற்றி ஐந்து கிலோமீற்றர் நீளமுள்ள தீயணைப்புத் தடுப்பு அரணை உருவாக்கி வருவதாகக் கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த காட்டுத்தீ நிபுணர் Jed Kaplan, காலநிலை மாற்றத்தால் கோடைக்காலம் வெப்பமடைந்து வருவதால் இந்த முன்னெச்சரிக்கை அவசியமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு மட்டும் ஏற்கனவே 27 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக வனத்துறை அமைச்சர் Todd Loewen எச்சரித்துள்ளார். பொதுமக்கள் தங்கள் வீடுகளின் கூரைகளில் காய்ந்த இலைகள் மற்றும் குப்பைகள் சேராமல் பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles