கனடாவின் “Steel City” என்று அழைக்கப்படும் Hamilton நகரம், அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் தாக்கத்தால் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது.
ஒருகாலத்தில் கனடாவில் உற்பத்தி செய்யப்பட்ட எஃகின் சுமார் பாதியை Hamilton மட்டும் உற்பத்தி செய்தது. இன்றும் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான தொன் எஃகு இங்கு தயாரிக்கப்படுகிறது.
ஆனால் அமெரிக்கா கனடா எஃகிற்கு விதித்துள்ள 50 சதவீத சுங்கவரி, Hamilton நகரின் எஃகு தொழில்துறையை நேரடியாக பாதித்துள்ளது.
கனடாவில் தயாரிக்கப்படும் சில பொருட்கள் உற்பத்தி செயல்முறையின் போது எல்லையை பலமுறை கடப்பதால், ஒவ்வொரு முறையும் சுங்கவரியின் தாக்கத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.
இந்த வர்த்தகப் போர் தொடங்கியதிலிருந்து Hamilton-ல் பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
இதற்கிடையில், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் steel மீது கனடா விதிக்கும் இறக்குமதி வரியை 25 இலிருந்து 50 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த எதிர்வரி நடவடிக்கைகளின் அடுத்தகட்ட தாக்கம் என்னவாக இருக்கும் என்ற அச்சம் Hamilton மக்களிடையே அதிகரித்துள்ளது.
Hamilton மேயர் Andrea Horwath கூறுகையில், steel தொழிற்துறை மட்டும் அல்லாமல் transportation, food and beverage manufacturing உள்ளிட்ட பல துறைகளும் இதனால் பாதிக்கப்படலாம் என எச்சரித்துள்ளார்.
மேலும் தொழிலாளர்கள் வேலை இழந்தால்,restaurant, entertainment மற்றும் சிறு வணிகங்களிலும் அதன் தாக்கம் தொடர்ச்சியாக எதிரொலிக்கலாம்.
எஃகு தொழில்துறையுடன் பல தலைமுறைகளாக இணைந்திருக்கும் Hamilton நகருக்கு இது மிகப்பெரிய சவாலாகும்.
