அமெரிக்க வரி தாக்கம்: லாபத்தை விட்டுக்கொடுக்கும் கனடிய நிறுவனங்கள்!

அமெரிக்கா விதித்துள்ள புதிய இறக்குமதி வரிகளால் கனடிய நிறுவனங்கள் கடும் அழுத்தத்தை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளன.

குறிப்பிட்ட சில கனடிய தயாரிப்புகள் அமெரிக்காவுக்குள் செல்லும்போது தற்போது கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

பொதுவாக அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் கனடிய பொருட்களுக்கான வரியை அமெரிக்க இறக்குமதியாளர்கள் செலுத்த வேண்டும்.

ஆனால் Etsy போன்ற சில online platforms-ல் பொருட்களை அனுப்புவதற்கு முன்பே வரி செலுத்த வேண்டியிருப்பதால், அந்தச் செலவை கனடிய சிறு நிறுவனங்களே ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் வாடிக்கையாளர்களை இழக்கக் கூடாது என்பதற்காக பல நிறுவனங்கள் இந்த கூடுதல் செலவை உடனடியாக வாடிக்கையாளரிமிருந்து வசூலிக்காமல், தமது லாபத்திலிருந்து செலுத்த முயற்சிக்கின்றன.

இதற்கிடையில் செப்டம்பர் 8 முதல், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பல பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களுக்கு கனடாவும் எதிர் வரிகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளது.

இதனால் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் appliances உள்ளிட்ட பொருட்களின் விலைகளும் கனடாவில் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

Vaughan-ல் appliance business நடத்தும் Sam Zahler, Whirlpool, KitchenAid, GE, Sub-Zero, Wolf போன்ற அமெரிக்க தயாரிப்புகள் பாதிக்கப்படும் என்கிறார்.

ஆனால் விலையை உடனடியாக வாடிக்கையாளர்கள் மீது சுமத்தாமல், நிறுவனங்களும் suppliers-உம் தங்களது லாபத்தை குறைத்து இந்தச் செலவை பகிர்ந்து கொள்ள முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி, நிறுவனங்கள் வரியை செலவை தாங்களே ஏற்றுக்கொள்ளலாம், விநியோகத்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் அல்லது இறுதியில் வாடிக்கையாளர்களின் விலைகளில் சேர்க்கலாம்.

அதனால் இந்த வர்த்தகப் போரின் இறுதிச் சுமை யார்மீது விழப்போகிறது?  நிறுவனங்கள் மீதா,  வாடிக்கையாளர் மீதா?

Related Articles

Latest Articles