ஹண்டாவைரஸ் (Hantavirus) – கனடியர்களுக்கு அறிவுறுத்தப்படும் முக்கிய தகவல்கள்!

அட்லாண்டிக் கடலில் உள்ள சுற்றுலா கப்பல் ஒன்றில் பரவியுள்ள அரிய வகை ஹண்டாவைரஸ் (Hantavirus) தொற்று குறித்து உலகளாவிய ரீதியில் அவதானம் திரும்பியுள்ளது.

MV Hondius என்ற கப்பலில் 147 பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருந்த நிலையில், இதுவரை 7 பேருக்குத் தொற்று அறிகுறிகள் காணப்படுகின்றன.

இதில் இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்தக் கப்பலில் 23 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் உள்ளனர், அவர்களில் நான்கு பேர் கனடியர்கள் (Canadians) ஆவர்.

எனினும், இதுவரை எந்தவொரு கனடியரும் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை என கனடா உலக விவகார அமைச்சு (Global Affairs Canada) தெரிவித்துள்ளது.

ஹண்டாவைரஸ் என்பது எலிகள் போன்ற கிருமி ஊர்திகளால் பரப்பப்படும் ஒரு குடும்ப வைரஸ் ஆகும்.

எலிகளின் சிறுநீர், எச்சில் அல்லது கழிவுகளிலிருந்து வரும் துகள்களை மனிதர்கள் சுவாசிப்பதன் மூலம் இது பொதுவாகப் பரவுகிறது.

இது கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடியது.

அமெரிக்க பிராந்தியங்களில் இதன் இறப்பு விகிதம் 50 சதவீதம் வரை அதிகமாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரித்துள்ளது.

இதற்கு என பிரத்யேக வைரஸ் எதிர்ப்பு சிகிச்சைகள் இல்லை.

கனடாவில் இந்த வைரஸின் தாக்கம் குறைவாகவே உள்ள போதிலும், கிராமப்புற பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் சர்வதேசப் பயணம் மேற்கொள்பவர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குறிப்பாக எலிகள் அதிகம் உள்ள இடங்களைச் சுத்தம் செய்யும்போது பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.

உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்புப்படி, பொதுமக்களுக்கான ஒட்டுமொத்த ஆபத்து குறைவாகவே உள்ளது.

இருப்பினும், சர்வதேச பயணத்தின் போது அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவது சிறந்தது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33
Video thumbnail
Facebook, Instagram சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா?
01:33
Video thumbnail
Weekend Plan இருக்கிறதா? வெளியே புறப்படுவதற்கு முன் Scarborough வானிலையை பாருங்கள்!
01:01
Video thumbnail
Toronto Zoo-வுக்கு வந்துள்ள புதிய குட்டி விருந்தினர்!
00:43
Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10

Related Articles

Latest Articles