வெளிநாட்டுப் பயணத் தொடர்புடைய தட்டம்மை (Measles) பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அனையடுத்து, ஸ்காபரோ (Scarborough) பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனை மற்றும் கிளினிக்கிற்குச் சென்றவர்களுக்கு தட்டம்மை பரவியிருக்கலாம் என றொரண்டோ பொது சுகாதாரத்துறை (Toronto Public Health – TPH) எச்சரித்துள்ளது.
அதன்படி Scarborough General Hospital (ER waiting room): ஜூன் 28, காலை 7:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை சென்று வந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 30, காலை 8:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை சென்று வந்தவர்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் 29, காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை சென்று வந்தவர்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நேரத்தில் அங்கு இருந்தவர்கள் ஜூலை 21 வரை தங்களைக் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
காய்ச்சல், இருமல், கண்கள் சிவத்தல், தடிப்பு (Rash) போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது றொரண்டோவில் 5 பேருக்கும், ஒன்டாரியோ (Ontario) மாகாணத்தில் 28 பேருக்கும் தட்டம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கனடா முழுவதும் இதுவரை 1,079 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த 2025 ஆம் ஆண்டில் கனடாவில் 5,462 தட்டம்மை பாதிப்புகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.










