விமானிக்கு திடீர் உடல்நலக்குறைவு – பாஸ்டன் நகருக்கு திருப்பி விடப்பட்ட ஏர் கனடா விமானம்!

நியூவர்க் (Newark) நகரில் இருந்து ஹாலிபாக்ஸ் (Halifax) நோக்கி பயணித்த ஏர் கனடா (Air Canada) நிறுவனத்தின் AC7664 விமானத்தின் தலைமை விமானி திடீரென ஏற்பட்ட மருத்துவ அவசரநிலை உள்ளாகியுள்ளார்.

இதனால், விமானம் அவசரமாக பாஸ்டன் லோகன் சர்வதேச விமான நிலையத்திற்கு (Boston Logan International Airport) திருப்பி விடப்பட்டு பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டது.

புதன்கிழமை மதியம் 1:40 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக மாசசூசெட்ஸ் மாநில பொலிஸார் (Massachusetts State Police) உறுதிப்படுத்தியுள்ளனர்.

விமானத்தின் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, தலைமை விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, விமானத்தின் துணை அதிகாரி (First Officer) உடனடியாக விமானத்தின் கட்டுப்பாட்டைத் தன்வசப்படுத்தி, அதனை பாஸ்டன் (Boston) நகருக்கு வெற்றிகரமாக திருப்பியுள்ளார்.

பாதிக்கப்பட்ட தலைமை விமானி உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தின் போது விமானத்தில் 61 பயணிகள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்த ஏர் கனடா நிறுவனம், பயணிகள் தங்களது பயணத்தைத் தொடர மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

 

Video thumbnail
21 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் சடலம் – குற்றத்தை ஒப்புக்கொண்ட தாய்!
00:55
Video thumbnail
கனடா மீது அமெரிக்கா ராணுவ ஆக்கிரமிப்பு : முன்னாயத்தமாகும் பிரதமர் கார்னி!
01:02
Video thumbnail
கனடாவில் பொய்யான கர்ப்பம் மூலம் பிரசவ உதவியாளர்களை ஏமாற்றிய சமூக சேவகி
01:04
Video thumbnail
மொன்றியலில் இணையவழி கூட்டத்தின் போது நடந்த கொடூரச் சம்பவம்: பொலிஸார் தீவிர விசாரணை
00:51
Video thumbnail
கனடா தன்னைத்தானே அழித்துக் கொள்கிறதாம்: டிரம்ப் விமர்சனம் - கனேடிய அமைச்சர்கள் மறுப்பு
01:10
Video thumbnail
பி.சி மாகாணத் தேர்தல் அறிவிப்பு : அக்டோபர் 24-இல் வாக்களிப்பு!
01:13
Video thumbnail
கனடாவில் அதிகரிக்கும் 'சாம்பல் விவாகரத்து' (Grey Divorce): 50 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவது ஏன்?
01:25
Video thumbnail
ஸ்கார்பாரோ வீதி மறுசீரமைப்பு: 'ஆபத்தான' வாகனம் ஓட்டுவதாக மக்கள் கவலை!
01:29
Video thumbnail
பிரின்சஸ் மார்கரெட் புற்றுநோய் அறக்கட்டள: $100 மில்லியன் வரலாற்றுச் சாதனை நன்கொடை!
01:06
Video thumbnail
றொராண்டோவில் இலையுதிர்காலம் தொடக்கம்: இந்த முறை மிதமான காலநிலை நிலவும் என கணிப்பு!
01:03

Related Articles

Latest Articles