வான் நகரில் வாகனத் தீவைப்பு: திட்டமிட்ட சதி என பொலிஸார் சந்தேகம்!

கனடாவின் வான் (Vaughan) நகரில் உள்ள ஒரு வீட்டின் முன்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் தீப்பிடித்து எரிந்த சம்பவமொன்று பதிவானது.

இது ஒரு திட்டமிட்ட தீவைப்பாக (Arson) இருக்கலாம் என பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பெல்வுட் புலிவார்ட் (Belwood Boulevard) பகுதியில், டப்ரின் வீதி (Dufferin Street) மற்றும் ருதர்போர்ட் வீதிக்கு (Rutherford Road) அருகாமையில் நேற்று அதிகாலை 1:45 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், சந்தேக நபர்கள் எவர் குறித்தும் இதுவரை எந்தத் தகவலையும் பொலிஸார் வெளியிடவில்லை. அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional Police) மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles