றொரண்டோவில் சோகம் – வாகனத்திற்குள் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு!

றொரண்டோவின் (Toronto) கிழக்கு பகுதியில் வாகனமொன்றின் பின் இருக்கையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

திங்கட்கிழமை அன்று குயின் வீதி கிழக்கு (Queen Street East) மற்றும் பேப் அவென்யூ (Pape Avenue) சந்திப்புப் பகுதியில், வாகனத்திற்குள் குழந்தை ஒன்று அசைவற்ற நிலையில் இருப்பதாக அவசர அழைப்பு கிடைத்துள்ளது.​

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மருத்துவக் குழுவினர், குழந்தையை மீட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

இந்தச் சோகமான சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் ஸ்காட் பிராட்பரி (Scott Bradbury) தெரிவித்துள்ளார்.

குழந்தையின் பெற்றோர்கள் தற்போது மருத்துவமனையில் உள்ளனர்.

இந்த உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் மற்றும் மேலதிக விபரங்களை தற்போதைக்கு வெளியிட முடியாது என டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Video thumbnail
கனடாவில் அதிகரித்து வரும் பலதுணை உறவுகள் – சட்ட ரீதியில் சிக்கல்!
01:17
Video thumbnail
றொரண்டோவிற்கு விசேட வானிலை எச்சரிக்கை - இடியுடன் கூடிய மழையைத் தொடர்ந்து கடும் குளிர்!
01:09
Video thumbnail
ஸ்மார்ட் கண்ணாடி மூலம் நூதன மோசடி – றொரண்டோவில் பாரிய சில்லறை வர்த்தக மோசடி கும்பல் கைது!
01:00
Video thumbnail
வான்கூவர் ஸ்கைட்ரெயினில் புதிய மார்க் V ரயில்கள் - பயணிகளுக்கு கூடுதல் வசதி!
01:07
Video thumbnail
சர்ச்சில் துறைமுக விரிவாக்கம் - பணிகளை முடிக்க மத்திய அரசு கடுமையான நிபந்தனை!
01:20
Video thumbnail
மிசிசாகாவில் பயங்கர தீ விபத்து - தனது தாய் மற்றும் சகோதரரைக் காப்பாற்ற தீக்குள் குதித்த நபர்!
00:55
Video thumbnail
ஸ்கார்பரோ ரயில் நிலையங்களில் வாகனத் திருட்டு - மூவர் கைது!
01:13
Video thumbnail
மளிகைப் பொருள் விலை உயர்வு - 'சர்வைலன்ஸ் பிரைசிங்' தடையை நிராகரித்தார் முதல்வர் டக் போர்ட்!
01:29
Video thumbnail
ஹாமில்டனில் போலி பொலிஸ் அதிகாரி அட்டகாசம்!
01:11
Video thumbnail
கனடா தபால் சேவை மாற்றம் - வீட்டுக்கு வீடு தபால் விநியோகம் விரைவில் நிறுத்தம்!
01:05

Related Articles

Latest Articles