றொரண்டோவில் கடும் குளிர் – பனிப்பொழிவு குறித்து மஞ்சள் எச்சரிக்கை!

ஏப்ரல் மாத இறுதியில் றொரண்டோ (Toronto) மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் (GTA) கடும் குளிர் நிலவி வருகிறது.

இதனால் பொதுமக்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை வெப்பநிலை உறைநிலைக்குக் கீழ் செல்லக்கூடும் என்பதால், Environment Canada பனிப்பொழிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

றொரண்டோ (Toronto) உடன் இணைந்து மிசிசாகா (Mississauga), பிராம்ப்டன் (Brampton), ஹாமில்டன் (Hamilton), வான் (Vaughan), ரிச்மண்ட் ஹில் (Richmond Hill), மார்க்கம் (Markham) மற்றும் நயாகரா (Niagara Region) உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும்.

கடும் குளிர் காரணமாகச் செடிகள் பாதிக்கப்படலாம் என்பதால், வெளியில் உள்ள செடிகளை மூடி வைக்கவோ அல்லது வீட்டிற்குள் எடுத்துச் செல்லவோ அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வரும் மே மாதத் தொடக்கத்திலும் இந்த குளிரான நிலை தொடரும். வெள்ளிக்கிழமை 9°C வரையும், சனிக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில் 8°C வரையுமே வெப்பநிலை நிலவும்.

அடுத்த வார தொடக்கத்தில் இருந்து படிப்படியாக வெப்பநிலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Latest Articles