றொரண்டோவில் அதிகாலைப் பரபரப்பு – ஹம்பர் யாட் கிளப் தீப்பற்றி எரிந்து நாசம்!

றொரண்டோவின் எட்டோபிகோ கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஹம்பர் யாட் கிளப் கட்டிடத்தில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தால் அக்கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளது.

அதிகாலை 4:47 மணியளவில் 101 Humber Valley Road இல் உள்ள வணிகக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, தீ கட்டிடத்தின் கூரை வழியாகக் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது.

நிலைமையின் தீவிரத்தைக் கருதி இது மூன்றாம் நிலை தீ விபத்தாக (Three-alarm fire) அறிவிக்கப்பட்டது.

சுமார் 27 தீயணைப்பு வாகனங்களும், 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் இணைந்து பல மணிநேரம் போராடித் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், கட்டிடத்திற்குள் யாரும் சிக்கியிருக்கவில்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது குறித்து ஒன்ராறியோ தீயணைப்பு மார்ஷல் (Ontario Fire Marshal) அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் தீ அருகில் உள்ள ஏனைய பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது.

 

Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33
Video thumbnail
Facebook, Instagram சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா?
01:33
Video thumbnail
Weekend Plan இருக்கிறதா? வெளியே புறப்படுவதற்கு முன் Scarborough வானிலையை பாருங்கள்!
01:01
Video thumbnail
Toronto Zoo-வுக்கு வந்துள்ள புதிய குட்டி விருந்தினர்!
00:43
Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10

Related Articles

Latest Articles