றொரண்டோவில் (Toronto) யூத மக்கள் மீதான துப்பாக்கிச் சூடு -மேலும் நால்வர் கைது!

கனடாவின் றொரண்டோ (Toronto) நகரில், கடந்த ஏப்ரல் 30 மற்றும் மே 7 ஆகிய திகதிகளில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பாக இரண்டு பதின்ம வயதினர் உட்பட மேலும் நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெரியவர்கள் லூகா சோகெலி (Luka Chokheli – 20) மற்றும் அலிஷஹின் இசாயேவ் (Alishahin Isayev – 23) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மற்ற இருவர் 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் என்பதால் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. இவர்கள் மீது ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இச்சம்பவங்களில் லெக்ஸஸ் (Lexus) ரக வாகனத்தைப் பயன்படுத்தி, போலித் துப்பாக்கிகள் (Orbeez-type / Imitation firearm) மூலம் யூத மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது தற்செயலாக நடந்ததல்ல, திட்டமிட்டு யூத சமூகத்தை இலக்கு வைத்தே நடத்தப்பட்டுள்ளது என பொலிஸ் அதிகாரி கேத்தரின் ஸ்டீபன்சன் (Katherine Stephenson) உறுதிப்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ருஸ்லான் நோவ்ருசோவ் (Ruslan Novruzov – 18) என்பவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் இரு சந்தேகநபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles