றொரண்டோவின் புதிய EDGE ஊக்கத் திட்டம் – முதல் பயனாளியாக நோர்த் யோர்க் நிறுவனம் தெரிவு!

றொரண்டோ நகரில் உள்ளூர் வணிகங்களை ஊக்குவிக்கவும், விரிவாக்கத்தை ஆதரிக்கவும் எட்ஜ்‘ (EDGE – Economic Development & Growth in Employment) ஊக்கத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் கீழ், முதல் நிறுவனம் நோர்த் யோர்க் (North York) பகுதியில் இயங்கி வரும் National Dry Beverages நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

1959ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த நிறுவனம், தனது தொழிற்சாலையை சுமார் 130,000 சதுர அடியாக விரிவுபடுத்தி, $18.1 மில்லியன் டொலர் முதலீடு செய்து, 20 புதிய நிரந்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், நிறுவனங்களின் வளர்ச்சியால் உருவாகும் கூடுதல் சொத்து வரியை, ஐந்து ஆண்டுகளுக்கு மாநகர சபையே திருப்பிச் செலுத்திவிடும்.

இது நிறுவனங்கள் டொராண்டோவை விட்டு வெளியேறாமல், அங்கேயே முதலீடு செய்ய ஊக்கமளிக்கும் என்று மேயர் ஒலிவியா சௌ (Olivia Chow) தெரிவித்துள்ளார்.

பயோமெடிக்கல் (Biomedical), திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் (Film studio complexes), அறிவியல் ஆராய்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை போன்ற முக்கிய துறைகளும் இந்தச் சலுகைக்குத் தகுதியுடையவை.

இந்தத் திட்டத்தின் மூலம் டொராண்டோவின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மாநகர சபை இலக்கு வைத்துள்ளது.

ஏற்கனவே மற்றொரு நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டு, மேலும் ஐந்து நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Video thumbnail
கனடாவில் சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்கள் மற்றும் ஏ.ஐ (AI) தடை? லிபரல் கட்சி விவாதம்!
01:21
Video thumbnail
கனடாவில் எரிபொருள் விலை குறைப்பு - மத்திய அரசின் எரிபொருள் வரி 5 மாதங்களுக்கு நிறுத்தம்!
01:25
Video thumbnail
ஒன்ராறியோ சிறைச்சாலைகளில் குளறுபடி - ஒவ்வொரு ஆண்டும் பெருமளவான கணக்கான கைதிகள் தவறுதலாக விடுதலை!
01:10
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:15
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:07
Video thumbnail
38,000 கிலோ பிளாஸ்டிக் மறுசுழற்சி – சாதனை செய்தது வான்கூவர்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் கனமழை - வீதிகளில் நீர் தேக்கம், சாரதிகளுக்கு எச்சரிக்கை!
01:12
Video thumbnail
ரெஜினாவில் (Regina) நள்ளிரவில் தீ வைப்பு - பாதுகாப்பு கெமராவில் பதிவான அதிர்ச்சி காட்சி!
01:05
Video thumbnail
பிராம்ப்டனில் கோர விபத்து - எஸ்.யு.வி கார் லொரியின் அடியில் சிக்கி நபர் பலி!
01:02
Video thumbnail
ஒன்ராறியோவில் பல பில்லியன் டொலர் செலவில் சிறை கொள்ளளவை அதிகரிக்க திட்டம்!
01:25

Related Articles

Latest Articles