றொரண்டோவின் பே ஸ்ட்ரீட் (Bay Street) மற்றும் அடிலெய்ட் ஸ்ட்ரீட் வெஸ்ட் (Adelaide Street West) சந்திப்பில் உள்ள ஒரு ஹோட்டலில், கடந்த சனிக்கிழமை காலை இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஹோட்டலில் தங்குவதற்காகப் பதிவுகளை மேற்கொள்ள (Check-in) வரிசையில் நின்றிருந்த ஒருவருக்கும், அவருக்கு முன்னால் நின்றிருந்த மூவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில், அந்த மூவரும் சேர்ந்து பாதிக்கப்பட்ட நபரைத் தாக்கியுள்ளனர்.
அந்தச் சமயத்தில், பாதிக்கப்பட்டவரின் தனிப்பட்ட உடமைகளையும் அவர்கள் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
தேடப்பட்டு வரும் மூவரும் 28 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என பொலிஸார் கருதுகின்றனர்.
கருப்பு நிற தாடி மற்றும் ஸ்பைக்கி (spiky) தலைமுடி கொண்டவர். “SUPREME” என எழுதப்பட்ட கருப்பு நிற ஜாக்கெட் மற்றும் “AMIRI” லோகோ பொறிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்திருந்தார்.
சுருட்டை முடி மற்றும் தாடி கொண்டவர். வலது காதில் கடுக்கண் அணிந்து, கருப்பு நிற ஸ்வெட்டர் மற்றும் பேண்ட் அணிந்திருந்தார்.
மெலிந்த உடல்வாகு கொண்டவர். “BALENCIAGA” என எழுதப்பட்ட டி-சர்ட், சாம்பல் நிற ஜீன்ஸ் மற்றும் கண்ணாடி அணிந்திருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக றொரண்டோ பொலிஸாரையோ அல்லது Crime Stoppers அமைப்பையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
