றொரண்டோ வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகாயம்!

றொரண்டோவின் நோர்த் யோர்க் (North York) பகுதியில் உள்ள CF Fairview Mall வணிக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

காலை 10 மணியளவில் மல்லில் உள்ள Michael Hill நகைக்கடையை கொள்ளையிட்டு தப்பியோடிய சந்தேக நபரை, பாதுகாப்பு உத்தியோகத்தர் தடுக்க முயன்றபோது அவர் சுடப்பட்டார்.

மார்புப் பகுதியில் காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சீரான நிலையில் உள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் மொன்றியலை (Montreal) சேர்ந்த 53 வயதுடைய கைல் டக்ளஸ் ப்ரூஸ் (Kyle Douglas Prouse) என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இவர் ஒரு வெள்ளை நிற வேனில் (White van) தப்பியோடியுள்ளார்.

தேடப்படும் நபருக்கு டொராண்டோ மற்றும் வான்கூவர் (Vancouver) பகுதிகளில் தொடர்புகள் இருப்பதாகவும், ஏற்கனவே 2023-ஆம் ஆண்டு டர்ஹாம் பிராந்தியத்தில் (Durham Region) நிகழ்ந்த திருட்டுச் சம்பவத்திலும் இவர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளை நிற முகக்கவசம் மற்றும் சாம்பல் நிற ஆடைகளை அணிந்திருந்த இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Video thumbnail
அமெரிக்காவில் அதிர்ச்சி - தனது பிள்ளைகள் உட்பட 8 சிறுவர்களை சுட்டுக்கொன்ற தந்தை!
01:00
Video thumbnail
றொரண்டோவில் சோகம் - வாகனத்திற்குள் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு!
00:55
Video thumbnail
இணையதளத்தில் தவறான மருத்துவத் தகவல்கள் - எச்சரிக்கும் கனடிய மருத்துவர்கள்!
01:19
Video thumbnail
பிராம்ப்டனில் தொடர் தீவைப்பு - ஒரே இரவில் 4 இழுவை வாகனங்கள் எரிப்பு!
00:40
Video thumbnail
பிரிட்டிஷ் கொலம்பியாவில் பணவீக்கம் உயர்வு - விலைவாசி மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை!
01:21
Video thumbnail
கனடாவில் அதிகரித்து வரும் பலதுணை உறவுகள் – சட்ட ரீதியில் சிக்கல்!
01:17
Video thumbnail
றொரண்டோவிற்கு விசேட வானிலை எச்சரிக்கை - இடியுடன் கூடிய மழையைத் தொடர்ந்து கடும் குளிர்!
01:09
Video thumbnail
ஸ்மார்ட் கண்ணாடி மூலம் நூதன மோசடி – றொரண்டோவில் பாரிய சில்லறை வர்த்தக மோசடி கும்பல் கைது!
01:00
Video thumbnail
வான்கூவர் ஸ்கைட்ரெயினில் புதிய மார்க் V ரயில்கள் - பயணிகளுக்கு கூடுதல் வசதி!
01:07
Video thumbnail
சர்ச்சில் துறைமுக விரிவாக்கம் - பணிகளை முடிக்க மத்திய அரசு கடுமையான நிபந்தனை!
01:20

Related Articles

Latest Articles