றொரண்டோ மிருகக்காட்சிச்சாலை மின்விசிறிகள் மற்றும் பனித்துண்டுகள் மூலம் விலங்குகளை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது!

கனடாவின் (Canada Day) தேசிய தினத்தன்று ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட றொரண்டோ மிருகக்காட்சிச்சாலை (Toronto Zoo), வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு ஒன்டாரியோ (Southern Ontario) பகுதியில் கடுமையான வெப்ப அலை வீசி வரும் நிலையிலேயே இந்த மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.

எனினும், விலங்குகளுக்கான பராமரிப்பு அமைப்புகள் தொடர்ந்து இயங்கியதால், அவை எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என மிருகக்காட்சிச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விலங்குகளின் நலனைக் கண்காணிக்க பிரத்யேக குழுக்கள் அங்கே நியமிக்கப்பட்டுள்ளன.

விலங்குகள் தங்குவதற்கு நிழலான இடங்கள், உட்புற வசதிகள், நீர்நிலைகள், பனித்துண்டுகள் (Ice treats), மின்விசிறிகள் மற்றும் மிஸ்டிங் (Misting) எனப்படும் நீர் தெளிப்பான் வசதிகள் மூலம் அவை தொடர்ந்து குளிர்ச்சியாக வைக்கப்பட்டுள்ளன.

வருகை தரும் பார்வையாளர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே மிருகக்காட்சிச்சாலை தற்காலிகமாக மூடப்பட்டதாகவும், மின்சாரத்தை மீண்டும் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Video thumbnail
21 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் சடலம் – குற்றத்தை ஒப்புக்கொண்ட தாய்!
00:55
Video thumbnail
கனடா மீது அமெரிக்கா ராணுவ ஆக்கிரமிப்பு : முன்னாயத்தமாகும் பிரதமர் கார்னி!
01:02
Video thumbnail
கனடாவில் பொய்யான கர்ப்பம் மூலம் பிரசவ உதவியாளர்களை ஏமாற்றிய சமூக சேவகி
01:04
Video thumbnail
மொன்றியலில் இணையவழி கூட்டத்தின் போது நடந்த கொடூரச் சம்பவம்: பொலிஸார் தீவிர விசாரணை
00:51
Video thumbnail
கனடா தன்னைத்தானே அழித்துக் கொள்கிறதாம்: டிரம்ப் விமர்சனம் - கனேடிய அமைச்சர்கள் மறுப்பு
01:10
Video thumbnail
பி.சி மாகாணத் தேர்தல் அறிவிப்பு : அக்டோபர் 24-இல் வாக்களிப்பு!
01:13
Video thumbnail
கனடாவில் அதிகரிக்கும் 'சாம்பல் விவாகரத்து' (Grey Divorce): 50 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவது ஏன்?
01:25
Video thumbnail
ஸ்கார்பாரோ வீதி மறுசீரமைப்பு: 'ஆபத்தான' வாகனம் ஓட்டுவதாக மக்கள் கவலை!
01:29
Video thumbnail
பிரின்சஸ் மார்கரெட் புற்றுநோய் அறக்கட்டள: $100 மில்லியன் வரலாற்றுச் சாதனை நன்கொடை!
01:06
Video thumbnail
றொராண்டோவில் இலையுதிர்காலம் தொடக்கம்: இந்த முறை மிதமான காலநிலை நிலவும் என கணிப்பு!
01:03

Related Articles

Latest Articles