றொரண்டோ பல்கலைக்கழகங்களில் பெண் பேராசிரியர்களுக்குக் குறைந்த ஊதியம் – அதிர்ச்சித் தகவல்!

கனடாவின் றொரண்டோ (Toronto) நகரில் உள்ள பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பெண் பேராசிரியர்கள், தங்களுக்கு நிகரான ஆண் பேராசிரியர்களை விட ஆண்டுக்கு $23,000 வரை குறைவாக ஊதியம் பெறுவதாக Statistics Canada அமைப்பின் புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

றொரண்டோவின் முக்கிய பல்கலைக்கழகங்களான University of Toronto, York University மற்றும் Toronto Metropolitan University ஆகியவற்றில் இந்த ஊதிய முரண்பாடு கணிசமாகக் காணப்படுகிறது.

குறிப்பாக University of Torontoவில் ஆண் பேராசிரியர்களின் சராசரி சம்பளம் $206,575 ஆக இருக்கும் வேளையில், பெண் பேராசிரியர்களுக்கு $183,350 மட்டுமே வழங்கப்படுகிறது.

அனுபவம் மற்றும் படிப்புத் துறைகளின் அடிப்படையிலேயே இந்த வேறுபாடு நிலவுவதாகப் பல்கலைக்கழக நிர்வாகங்கள் கூறினாலும், இதனைப் பேராசிரியர்கள் சங்கங்கள் (UTFA, YUFA, TFA) முற்றாக மறுப்பதுடன், இது முறையான பாலினப் பாகுபாடு (gender discrimination) என்றும் குற்றம் சாட்டுகின்றன.

தொடக்கச் சம்பள பேச்சுவார்த்தைகளில் பெண்களுக்கு ஏற்படும் சவால்கள், குடும்பப் பொறுப்புகள் காரணமாக பதவி உயர்வுகளில் ஏற்படும் தாமதம் மற்றும் பெண்கள் அதிகம் உள்ள கல்வித் துறைகளுக்குக் குறைந்த முக்கியத்துவம் வழங்கப்படுவதுமே இந்த ஊதிய இடைவெளிக்குக் காரணம் என சமூகவியல் பேராசிரியர் Pat Armstrong மற்றும் ஊதிய சமத்துவ நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles