றொரண்டோ நகரின் மிகப்பெரிய பொதுப் பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறியுள்ள லித்தியம் மின்கல தீ விபத்துகள்!

றொரண்டோ  Toronto நகரில் Lithium-ion Battery லித்தியம் மின்கலங்களால் ஏற்படும் தீ விபத்துகள், நகரின் மிகப்பெரிய மற்றும் தீவிரமாகி வரும் பொதுப் பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக றொரண்டோ   தீயணைப்பு படை பிரதானி Toronto Fire Chief Jim Jessop எச்சரித்துள்ளார்.

City Councilஇல் தனது 2025ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்து உரையாற்றிய Jim Jessop, கடந்த மூன்று ஆண்டுகளில் Lithium-ion பேட்டரி தொடர்பான தீ விபத்துகள் 214 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 50க்கும் மேற்பட்ட சம்பவங்களுக்கு தீயணைப்புப் படையினர் பதிலளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

E-bike பேட்டரிகள் வெடித்துச் சிதறும் வீடியோவைச் சுட்டிக்காட்டிய அவர், அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிக எண்ணிக்கையிலான ஈ-பைக்குகள் சேமித்து வைக்கப்படுவதால், மீட்புப் பணிகளின் போது தீயணைப்பு வீரர்கள் உள்ளே இருக்கும் போதே பேட்டரிகள் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

ஒரே குடியிருப்பில் 12க்கும் மேற்பட்ட ஈ-பைக்குகள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த அவர், அடுக்குமாடி குடியிருப்புகளில் பைக்குகளைச் சேமித்து வைப்பதைக் கட்டுப்படுத்த சட்டரீதியான விதிமுறைகள் இல்லை என்றும்  கூறினார்.

இதற்கு தேவையான திருத்தங்களை மேற்கொள்ள Queen’s Park அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Video thumbnail
Mississauga அடுக்குமாடிக் கட்டிடத்தில் சந்தேகத்திற்கிடமான தீ – 11 பேர் மருத்துவமனையில்!
01:01
Video thumbnail
Pickering அணு உலைகள் 10 ஆண்டுகளுக்கு நிறுத்தம்! $26.8 பில்லியன் திட்டம்!
01:43
Video thumbnail
Scarborough வாகனத் தரிப்பிடத்தில் வீடற்றவர்களுக்கு புதிய குடியிருப்பு!
01:55
Video thumbnail
Alberta பிரிவினை: Calgary சபையிலும் பிளவு!
01:20
Video thumbnail
Alberta பிரிவினை: வாக்கெடுப்புக்குப் பின்னும் தொடரும் பிரிவினை விவாதம்!
01:06
Video thumbnail
100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு!
01:25
Video thumbnail
ஒன்ராறியோவில் சூதாட்டப் பாதிப்பு - அவசர சிகிச்சைக்கு வருவோர் இரட்டிப்பு!
01:23
Video thumbnail
GO ரயிலில் மது அருந்தி தொந்தரவு! 3 சிறுமிகள் மீது குற்றச்சாட்டு!
01:16
Video thumbnail
மழை குறைகிறது! Toronto Weekend Weather
01:10
Video thumbnail
Greenland-இல் அமெரிக்காவுக்கு நிரந்தர அதிகாரம்?
01:49

Related Articles

Latest Articles