மொன்றியலில் இணையவழி கூட்டத்தின் போது நடந்த கொலை

கனடாவின் மொன்றியல் (Montreal) நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 45 வயதான லீலா பென் சேலம் (Leila Ben Salem) என்ற பெண் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:25 மணியளவில் ரெனே-லெவெஸ்க் பூலேவார்ட் (Rene-Levesque Boulevard) பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில், உடன் பணிபுரிபவருடன் இணையவழி (Virtual meeting) கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோதே இக்கொலை இடம்பெற்றுள்ளது.

துனிசிய (Tunisian) நாட்டவரான இவர் அண்மையிலேயே இந்த புதிய குடியிருப்பை வாங்கியுள்ளார்.

சந்தேக நபர் ஒருவர் இவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை அடித்துக் கொன்றதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொன்றியல் பொலிஸார் (SPVM) இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, சந்தேக நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

2026 ஆம் ஆண்டில் மொன்றியல் பொலிஸ் எல்லைக்குள் பதிவான 19 ஆவது கொலைச் சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles