போலிச் செய்திகளை வெளியிடும் AI இணையத்தளங்கள் – றொரண்டோ விமான நிலையம் எச்சரிக்கை!

கனடாவின் மிகப்பெரிய விமான நிலையமான Toronto Pearson Airport, விமானச் சேவைகள் குறித்து தவறான மற்றும் போலியான தகவல்களைப் பரப்பும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட கட்டுரைகள் குறித்துப் பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில மாதங்களாக இத்தகைய போலிச் செய்திகள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக விமான நிலைய ஊடகப் பேச்சாளர் Sean Davidson தெரிவித்துள்ளார்.

உண்மைப் பதிவுகள் போல தோற்றமளிக்கும் சில இணையத்தளங்களில், ஒரு நாளைக்குச் சுமார் 100 கட்டுரைகள் வரை ‘AI பாட்‘ (Bot) எழுத்தாளர்களால் எழுதப்படுகின்றன.

கனடா முழுவதும் விமானச் சேவைகளில் பெரும் குழப்பம்” போன்ற போலித் தலைப்புகளால் பயந்து, பயணிகள் தங்களின் பயணங்களை அவசரமாக ரத்து செய்யவோ அல்லது மாற்றி அமைக்கவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வலைத்தளப் போக்குவரத்து (Traffic) மற்றும் விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிப்பதற்காகவும், பயணிகளின் தனிப்பட்ட தரவுகளைத் திருடி மால்வேர்’ (Malware) தாக்குதல்களை நடத்துவதற்காகவும் இவ்வாறான போலியான செய்திகள் பரப்பப்படுவதாக இணையப் பாதுகாப்பு நிபுணர்களான Ritesh Kotak மற்றும் Carmi Levy எச்சரித்துள்ளனர்.

அதன்படி, TheTraveler.org,  Toronto Digest, Travel and Tour World, NomadLawyer, Travel Tourister உள்ளிட்ட போலி இணையத்தளங்கள் விமான நிலைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

எனவே, பயணிகள் தங்களின் விமானத் தாமதங்கள் அல்லது ரத்துச் செய்தல் குறித்த விபரங்களை அறிய, சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் அல்லது Pearsonஇன் அதிகாரப்பூர்வ பக்கங்களை மட்டுமே நேரடியாகத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles