பிராம்ப்டனில் கோர விபத்து – எஸ்.யு.வி கார் லொரியின் அடியில் சிக்கி நபர் பலி!

பிராம்ப்டனின் ஏர்போர்ட் வீதியில் (Airport Road), வில்லியம்ஸ் பார்க்வேக்கு (Williams Parkway) சற்று வடக்கே செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எஸ்.யு.வி (SUV) வாகனம் ஒன்று டிரான்ஸ்போர்ட் லொரி ஒன்றின் பின்புறம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய எஸ்.யு.வி வாகனத்தின் முன்பகுதி லொரியின் அடியில் சிக்கியதால், காரில் இருந்த சாரதியும், பெண் பயணியும் கடுமையாகக் காயமடைந்துள்ளனர்.

மீட்புக் குழுவினர் காரை வெட்டி இருவரையும் மீட்டனர். துரதிர்ஷ்டவசமாக, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் சாரதி உயிரிழந்தார்.

ஆபத்தான நிலையில் இருந்த பெண் பயணி, விமானம் மூலம் அவசர சிகிச்சைப் பிரிவு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்திற்கு அதிவேகம் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என நேரில் பார்த்தவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

பீல் பொலிஸ் (Peel Police) மேஜர் கொலிஷன் பணியகம் (Major Collision Bureau) இது குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் பயணித்தவர்கள் யாராவது டயஷ்-காம் (Dashcam) காணொளிகள் வைத்திருந்தால் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

Video thumbnail
கனடாவில் அதிகரித்து வரும் பலதுணை உறவுகள் – சட்ட ரீதியில் சிக்கல்!
01:17
Video thumbnail
றொரண்டோவிற்கு விசேட வானிலை எச்சரிக்கை - இடியுடன் கூடிய மழையைத் தொடர்ந்து கடும் குளிர்!
01:09
Video thumbnail
ஸ்மார்ட் கண்ணாடி மூலம் நூதன மோசடி – றொரண்டோவில் பாரிய சில்லறை வர்த்தக மோசடி கும்பல் கைது!
01:00
Video thumbnail
வான்கூவர் ஸ்கைட்ரெயினில் புதிய மார்க் V ரயில்கள் - பயணிகளுக்கு கூடுதல் வசதி!
01:07
Video thumbnail
சர்ச்சில் துறைமுக விரிவாக்கம் - பணிகளை முடிக்க மத்திய அரசு கடுமையான நிபந்தனை!
01:20
Video thumbnail
மிசிசாகாவில் பயங்கர தீ விபத்து - தனது தாய் மற்றும் சகோதரரைக் காப்பாற்ற தீக்குள் குதித்த நபர்!
00:55
Video thumbnail
ஸ்கார்பரோ ரயில் நிலையங்களில் வாகனத் திருட்டு - மூவர் கைது!
01:13
Video thumbnail
மளிகைப் பொருள் விலை உயர்வு - 'சர்வைலன்ஸ் பிரைசிங்' தடையை நிராகரித்தார் முதல்வர் டக் போர்ட்!
01:29
Video thumbnail
ஹாமில்டனில் போலி பொலிஸ் அதிகாரி அட்டகாசம்!
01:11
Video thumbnail
கனடா தபால் சேவை மாற்றம் - வீட்டுக்கு வீடு தபால் விநியோகம் விரைவில் நிறுத்தம்!
01:05

Related Articles

Latest Articles