உலகப் புகழ்பெற்ற பாப் இசை நட்சத்திரம் டெய்லர் ஸ்விப்ட் (Taylor Swift) மற்றும் என்.எப்.எல் (NFL) கால்பந்து விளையாட்டு வீரர் டிராவிஸ் கெல்சி (Travis Kelce) ஆகியோரின் திருமணம் நியூயோர்க்கின் மெடிசன் ஸ்கொயர் கார்டனில் (Madison Square Garden) வெள்ளிக்கிழமை இரவு மிக ரகசியமாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெற்றது.
யாரும் எதிர்பாராத விதமாக, பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ஆடம் சேண்ட்லர் (Adam Sandler) இந்த திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார்.
மணமகள், மணமகன் தரப்பில் வழக்கமான தோழிகள் அல்லது தோழர்கள் (Bridesmaids/Groomsmen) எவரும் நியமிக்கப்படவில்லை.
மாறாக, டெய்லரின் (Taylor) சகோதரர் ஆஸ்டின் ஸ்விஃப்ட் (Austin Swift) கௌரவத் தோழனாகவும் (Man of Honor), டிராவிஸின் (Travis) சகோதரர் ஜேசன் கெல்சி (Jason Kelce) சிறந்த தோழனாகவும் (Best Man) செயல்பட்டனர்.
மணமக்கள் இருவரும் கிறிஸ்டியன் டியோர் (Christian Dior Haute Couture) நிறுவனத்தின் பிரத்தியேக வடிவமைப்பிலான ஆடைகளையும், கிறிஸ்டியன் லுபுடினின் (Christian Louboutin) காலணிகளையும் அணிந்திருந்தனர்.
டெய்லர் (Taylor) கார்டியர் (Cartier) நகைகளை அணிந்திருந்தார்.
எட் ஷீரன் (Ed Sheeran), செலினா கோம்ஸ் (Selena Gomez), கிலாமிளா கபெல்லோ (Camila Cabello), ஹக் கிராண்ட் (Hugh Grant), ஈதன் ஹாக் (Ethan Hawke) மற்றும் ஜேசன் சுடேகிஸ் (Jason Sudeikis) உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஹாலிவுட் மற்றும் விளையாட்டுத்துறை நட்சத்திரங்கள் இதில் கலந்துகொண்டனர்.
மிகவும் கடுமையான பாதுகாப்புடன், கைபேசிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு நடைபெற்ற இத்திருமணம் முடிந்ததும், அரங்கிற்கு வெளியே “JUST&T MARRIED” என்ற மின்னணு பலகை ஒளிரவிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.










