பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!

Bitcoin-ஐ பாதுகாப்பாகச் சேமித்து வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட சாதனங்களிலிருந்து, ஹேக்கர்கள் 140 மில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்பிலான Bitcoin-ஐ திருடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய நிறுவனமான Coinkite தயாரித்த Coldcard Hardware Wallet சாதனங்களின் பழைய மென்பொருளில் இருந்த பாதுகாப்புக் குறைபாடே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

ஜூலை 30ஆம் தேதி நடத்தப்பட்ட முதலாவது தாக்குதலில், வெறும் 41 நிமிடங்களில் 1,196 Bitcoin முகவரிகளிலிருந்து ஆயிரத்துக்கும் அதிகமான Bitcoin திருடப்பட்டதாக Galaxy Research ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து மேலும் பல கட்டங்களாகத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன், ஆயிரக்கணக்கான Bitcoin Wallet முகவரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Wallet உருவாக்கும்போது வழங்கப்படும் இரகசிய Recovery Phrase-ஐ ஹேக்கர்கள் கணிக்கக்கூடிய வாய்ப்பு இருந்ததால், சாதனத்தை நேரடியாகத் தொடாமலேயே Bitcoin-ஐ திருட முடிந்திருக்கலாம் எனப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பயனர்கள் சாதனத்தின் Firmware-ஐ Update செய்வதுடன், புதிய Recovery Phrase மற்றும் புதிய Wallet ஒன்றை உருவாக்கி, தங்களது Bitcoin-ஐ உடனடியாக மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பானவை எனக் கருதப்படும் Offline Wallet-கள்கூட இணையக் குற்றவாளிகளின் இலக்காகலாம் என்பதை இந்தச் சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.

Coldcard சாதனத்தைப் பயன்படுத்துகிறீர்களா? உங்கள் Wallet மற்றும் Firmware Version-ஐ உடனடியாகச் சரிபாருங்கள்.

Related Articles

Latest Articles