நோர்த் யோர்க் (North York) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ஜன்னலிலிருந்து விழுந்த 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 8:15 மணியளவில் Jane Street மற்றும் Chalkfarm Drive சந்திப்புப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் யாரோ ஒருவர் மேலிருந்து விழுந்ததாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், உயிரிழந்த நிலையில் ஒரு சிறுமியைக் கண்டெடுத்தனர்.
அந்தச் சிறுமி தனது படுக்கையறை ஜன்னலிலிருந்து தவறி விழுந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிறுமியின் மரணத்தில் தற்போதைக்குச் சந்தேகத்திற்கிடமான விடயங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ள பொலிஸார், உடற்கூறாய்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர்.
இந்தச் சோகமான சம்பவம் குறித்து மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
