நெதன்யாகுவை ‘அமைதியின் எதிரி’ என விமர்சித்த எலிசபெத் மே!

கனடிய பசுமைக் கட்சியின் (Green Party) தலைவரான எலிசபெத் மே (Elizabeth May), இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) “அமைதியின் எதிரி” என்று பகிரங்கமாக விமர்சித்ததார்.

அதனை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டதால்  அவர் மௌனித்தார்.

காஸாவில் (Gaza) பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கும், பிராந்திய ரீதியான மோதல்களைத் தூண்டுவதற்கும் நெதன்யாகுவின் அரசாங்கமே காரணம் என அவர் தனது உரையில் சாடினார்.

எலிசபெத் மே பேசத் தொடங்கியதும், நாடாளுமன்றத்தில் இருந்த பெரும்பாலான உறுப்பினர்கள் (MPs) அவருக்கு எதிராகக் கூச்சலிட்டுப் போர்க்கொடி தூக்கினர்.

இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் (Speaker) தலையிட்டு அவரது உரையைத் தடுத்து நிறுத்தினார்.

இதன்போது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) பிடியாணை எச்சரிக்கைகள் மற்றும் காஸா போரில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்து அவர்

இருப்பினும், கனடிய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் அவரது கருத்தை ஏற்க மறுத்து கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் கனடாவில் நிலவும் கருத்துச் சுதந்திரம் மற்றும் காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்த விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது.

பிரித்தானியாவில் நிலவும் அரசியல் சூழலைப் போலவே, கனடாவிலும் இஸ்ரேலுக்கு எதிரான விமர்சனங்கள் ஒடுக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

போர் குற்றச்சாட்டுகள் மற்றும் ஊழல் வழக்குகளை எதிர்கொண்டுள்ள ஒரு தலைவரைப் பற்றிப் பேசுவதற்குக் கூட நாடாளுமன்றத்தில் அனுமதி மறுக்கப்படுவது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் எனப் பசுமைக் கட்சி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles