துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரிக்கு காயம்: மனைவியின் உருக்கமான பதிவு!

கனடாவின் பெல்லிவில்லே (Belleville, Ont.) பகுதியில் அமைந்துள்ள (Sons of Jacob Synagogue) யூத தொழுகை தலத்திற்கு வெளியே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி (Const. Jeff Smith) குணமாகி வர நீண்ட மற்றும் கடினமான பாதை காத்திருப்பதாக அவரது மனைவி ஆஷ்லி ஸ்மித் (Ashley Smith) தெரிவித்துள்ளார்.

13 ஆண்டுகள் அனுபவம் கொண்ட அதிகாரி ஜெப் ஸ்மித் கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

துப்பாக்கிச்சூடு நடத்திய 29 வயதான சந்தேக நபர் ஷான் வார்ட் (Sean Ward) பொலிஸார் நடத்திய எதிர் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தார்.

முன்னாள் ராணுவ வீரரான இவர் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்துப் பேசிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி (David McGuinty), இச்சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது எனக் குறிப்பிட்டதுடன், ராணுவ ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி முறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இதனிடையே, பெரும் அசம்பாவிதத்தைத் தடுத்த அதிகாரி ஜெப் ஸ்மித்தை ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் (Doug Ford) ஒரு “கதாநாயகன்” எனப் பாராட்டியுள்ளார்.

Related Articles

Latest Articles