கனடாவில் சில அமெரிக்கப் பொருட்களை வாங்க திட்டமிட்டிருந்தால் September 8 இற்கு முன்பாக வாங்குவது பயனுள்ளதாக இருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்கா வரிகளுக்கு பதிலடியாக, கனடாவும் September 8 முதல் சுமார் 27.6 billion dollars மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிப் பொருட்கள் மீது புதிய எதிர் வரிகளை விதிக்கிறது.
இதனால் குறிப்பிட்ட அமெரிக்கப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக fridge, washing machine போன்ற பெரிய appliance ஒன்றை ஏற்கனவே வாங்கத் திட்டமிட்டிருந்தால், வரி அமலுக்கு வருவதற்கு முன்பாக வாங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என Carleton University பேராசிரியர் Ian Lee தெரிவித்துள்ளார்.
அதேபோல், நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் குறிப்பிட்ட American பொருட்களை முன்கூட்டியே வாங்குவது சிலருக்கு பயனுள்ளதாக இருக்கலாம்.
ஆனால் பல பொருட்களுக்கு Canadia அல்லது வேறு நாடுகளிலிருந்து மாற்றுத் தயாரிப்புக்கள் கிடைக்கின்றன.
மேலும் வரி 25 அல்லது 50 சதவீதம் என்றாலே கடையில் அந்தப் பொருளின் விலை அதே அளவு உயர்ந்துவிடும் என்றும் அர்த்தமில்லை.
கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட வரிகள் குறித்து Bank of Canada நடத்திய ஆய்வில், 25 சதவீத வரி உயர்ந்த பொருட்களின் சில்லறை விலை சராசரியாக சுமார் 6 சதவீதமே அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.










