சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தர முயன்ற 12 பேர் கைது: டர்ஹாம் பொலிசாரின் அதிரடி நடவடிக்கை!

15 வயது சிறுமியிடம் பாலியல் சேவைகளைப் பெற முயன்ற நபர்களைக் இலக்கு வைத்து டர்ஹாம் (Durham) பொலிசார் மேற்கொண்ட ‘புராஜெக்ட் ஃபயர்பேர்ட்’ (Project Firebird) எனும் ரகசிய நடவடிக்கையின் மூலம் 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அக்டோபர் மாதத்தில் 10 நாட்கள் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, 15 வயது சிறுமி எனத் தெளிவாகக் குறிப்பிட்டு பொலிசாரால் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டது.

8,000க்கும் அதிகமானோர் பார்வையிட்ட அந்த விளம்பரத்தைப் பார்த்து, சிறுமி என தெரிந்தும் தொடர்புகொண்டு நேரில் சந்திக்க முற்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

மனித கடத்தல் மற்றும் பாலியல் சுரண்டல் சம்பவங்களில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்படும் வீதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக பொலிஸ் உயர் அதிகாரி ரியான் கொன்னலி (Ryan Connolly) தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டில் 41 சதவீதமாக இருந்த பாதிப்பு, 2025 இல் 49 சதவீதமாகவும், 2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான பகுதியில் 55 சதவீதமாகவும் (96 சிறுவர்கள்) உயர்ந்துள்ளதாக டர்ஹாம் (Durham) பொலிசார் எச்சரித்துள்ளனர்.

Related Articles

Latest Articles