சட்டவிரோதமாக மீன் பிடித்ததால் Ontario முழுவதும் வாழ்நாள் தடை!

Ontarioவில் ஆண்டு முழுவதும் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள ஆற்றில் சட்டவிரோதமாக மீன் பிடித்த இருவருக்கு மொத்தமாக 4,000 டொலருக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Scarborough-வைச் சேர்ந்த Chunyang Liu மற்றும் East Gwillimbury-ஐச் சேர்ந்த Mifeng Li ஆகியோருக்கே இந்த தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

2025 செப்டம்பர் 18ஆம் தேதி, Nipigon பகுதியில் உள்ள Black Sturgeon River ஆற்றில் Conservation Officers சோதனை மேற்கொண்டபோது, இருவரும் ஆற்றங்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக ஒன்டாரியோ இயற்கை வளங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருவரிடமிருந்தும் அந்த ஆற்றில் பிடிக்கப்பட்ட walleye மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Liu, க்கு $1,050 அபராதம் விதிக்கப்பட்டதுடன், மீன்பிடி உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Li மீது மீன்படி உரிமம் இல்லாமல் மீன்பிடித்தது அதிகாரியின் கடமையைத் தடுத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து $2,990 அபராதம், மீன்பிடி உபகரணம் பறிமுதல், இரண்டு வருட probation மற்றும் Ontarioவில் வாழ்நாள் முழுவதும் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Black Sturgeon River-ல் walleye மீன்பிடித்தல் ஆண்டு முழுவதும் தடை செய்யப்பட்டிருக்கிறது.

Lake Superior-இன் Black Bay பகுதியில் உள்ள walleye மீன் இனத்தை மீண்டும் அதிகரித்து பாதுகாப்பதே இந்தத் தடையின் முக்கிய நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles