கனடாவில் கால்கரி (Calgary) நகரின் தெற்குப் பகுதியில் உள்ள ஓகோடோக்ஸ் (Okotoks) பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள பள்ளி காலியாக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை காலை 7:00 மணியளவில் அப்பகுதியில் உரத்த வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து பெரும் புகைமூட்டம் எழுந்ததாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் குறித்த வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானதாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள ஹேரிடேஜ் ஹைட்ஸ் பள்ளி (Heritage Heights School) உடனடியாக வெளியேற்றப்பட்டு, அன்றைய தினம் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
பேருந்துகளில் வந்த மாணவர்கள் பாதுகாப்பாக ஈகோல் பெர்சி பெக்லர் (École Percy Pegler) பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பெற்றோர் தங்களது பிள்ளைகளை அங்கிருந்து அழைத்துச் செல்லுமாறு புட்ஹில்ஸ் பள்ளிப் பிரிவு’ (Foothills School Division) கேட்டுக்கொண்டுள்ளது.
அதிகாரிகள் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
